வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மிச்சம் மீதி முடிச்சு ரிலீசுக்கு தயாரான அஜித்.. கோட்-க்கு போட்டியாக விடாமுயற்சி எடுக்கும் விஸ்வரூபம்

Ajith in Vidamuyarchi: ஒரு விஷயத்தில் எந்த அளவிற்கு நாம் மெனக்கெடு செய்கிறோமோ, அதற்கு ஏற்ற மாதிரி தான் பலனும் கிடைக்கும் என்று சொல்வார்கள். அதே மாதிரி அசால்டாக சில விஷயங்களை எடுத்தால் அதற்கு ஏற்ற மாதிரி தான் ரிசல்ட் வரும். அப்படித்தான் அஜித் சினிமாவில் ஏதோ ஏனோதானோ என்று நடித்துக் கொண்டு வருகிறார்.

அதனால் தான் துணிவு படம் வெளிவந்து கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் வரை அவரால் ஒரு படத்தை கூட முடிக்க முடியவில்லை. இடையில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்ததால் படப்பிடிப்பு அவ்வப்போது பிரேக் எடுத்து வருகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை முடிப்பதற்குள் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் குட் பேட் அக்லி படத்திற்கும் கமிட் ஆகிவிட்டார்.

விடாமுயற்சி படப்பிடிப்பில் அதிரடியாக களமிறங்கும் அஜித்

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் போய்க் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஜூன் மாதத்தில் முதல் வாரத்திற்குள் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக விடாமுயற்சி படப்பிடிப்புக்கு தயாராக போகிறார். ஏற்கனவே ஒரு வருடமாக நடத்திய விடாமுயற்சி படப்பிடிப்பு தற்போது மிச்ச மீதி இருக்கும் காட்சிகளை எடுத்து ரிலீசுக்கு தயாராக போகிறது.

ஏனென்றால் செப்டம்பர் 5ஆம் தேதி விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் கோட் படத்திற்கு போட்டியாக விடாமுயற்சியை ரிலீஸ் பண்ண வேண்டும் என்று மொத்த டீமும் விஸ்வரூபமாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது கடந்த வருடம் பொங்கலை ஒட்டி விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு படம் இரண்டுமே ஒன்றாக வந்தது.

ஆனால் அதற்குள் விஜய் நடிப்பில் லியோ படம் வந்துவிட்டது. தற்போது கோட் படமும் ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால் அஜித் நடிப்பில் எந்த படமும் வெளிவரவில்லை. இப்படியே விட்டால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்த மாதிரி அமைந்து விடும் என்று அஜித் எப்படியாவது செப்டம்பர் மாதத்தில் விடாமுயற்சி படத்தை ரிலீஸ் பண்ண வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார்.

அந்த வகையில் விடாமுயற்சி படப்பிடிப்பு ஜூன் மாதம் 24 ஆம் தேதி மறுபடியும் ஆரம்பிக்கப் போகிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வேலைகளும் மும்மரமாக செயல்பட்டு செப்டம்பர் அல்லது தீபாவளிக்கு நிச்சயமாக ரிலீஸ் பண்ணி விட வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார்கள். அதனால் இந்த வருடம் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய திருவிழாவாக இவர்களுடைய படங்கள் அனைத்து திரையரங்கையும் அலங்கரிக்க போகிறது.

இழுத்தடிக்கும் அஜித்தின் விடாமுயற்சி படம்

Trending News