புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பணத்திற்காக கொள்கையை காற்றில் பறக்க விட்ட அஜித்.. நேக்காக பேசி வளைத்து போட்ட திமிங்கலம்

Actor Ajith: அஜித் எப்போதுமே தனக்கென ஒரு கொள்கையை அமைத்து அதன்படி தான் செயல்படுவார். யாருக்காகவும் எதற்காகவும் அதை மாற்றிக் கொள்ள மாட்டார். ஆனால் சமீப காலமாக அவர் தன்னுடைய பாலிசியை எல்லாம் கொஞ்சம் தளர்த்தி வருகிறார்.

அதாவது அவர் கார்ப்பரேட் கம்பெனி தயாரிக்கும் படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க மாட்டார். அதேபோன்று தன் படத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்களோ, காட்சிகளோ வருவதையும் விரும்ப மாட்டார். இது எல்லாவற்றிற்கும் மேலாக இயக்குனர் மீது நம்பிக்கை குறைந்து விட்டால் திரும்பவும் அவர்களுக்கு மறு வாய்ப்பு கொடுக்க மாட்டார்.

Also read: டபுள் மடங்கு சம்பளம், டபுள் ஓகே சொன்ன குணசேகரன்.. நாங்க என்ன தக்காளி தொக்கா, நெருக்கடியில் சன் டிவி

இப்படி சில கொள்கைகள் அவருக்கு இருக்கிறது. ஆனால் இப்போது அதை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு படம் பண்ணுவதற்கு தயாராகி விட்டார். அந்த வகையில் லைக்கா தயாரிக்கும் விடாமுயற்சிக்காக இவருக்கு அதிகபட்ச சம்பளம் பேசப்பட்டிருக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக அவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். நீண்ட காலமாகவே இதற்கான முயற்சியில் இருந்து வந்த கலாநிதி மாறன் இப்போது சரியான சமயம் பார்த்து அஜித்திடம் நைசாக பேசி வளைத்து போட்டு இருக்கிறார்.

Also read: படுஜோராக நடந்த தலைவர் 170 பட பூஜை.. ஆளே அடையாளம் தெரியாமல் ஹேண்ட்ஸம் லுக்கில் ரஜினி

இதற்காக ஒரு பெரிய தொகையை சம்பளமாக தருவதற்கும் அவர்கள் முன் வந்திருக்கின்றனர். இதன் மூலம் அஜித் பணத்திற்காக கொள்கையை விட்டுக் கொடுத்து விட்டார் என்ற பேச்சுக்களும் சத்தம் இல்லாமல் புதைந்து கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க விக்னேஷ் சிவனுக்கு அடுத்ததாக ஒரு வாய்ப்பை கொடுக்கலாம் என்ற முடிவிலும் அவர் இருக்கிறாராம்.

லைக்கா தயாரிப்பில் இவருடன் கூட்டணி அமைக்க இருந்த அஜித் கதை சொதப்பலால் மகிழ்திருமேனியை தேர்ந்தெடுத்தார். இது விக்னேஷ் சிவனின் அலட்சியத்தால் வந்த மாற்றம் தான். இருப்பினும் அவருக்கு மற்றொரு வாய்ப்பை கொடுக்கவும் அவர் யோசித்து வருகிறாராம். இவ்வாறாக தன் பாலிசியை தள்ளி வைத்துள்ள அஜித் விடாமுயற்சிக்குப் பிறகு அடுத்தடுத்த படங்களை தொடங்குவதற்கும் ரெடியாகி வருகிறாராம்.

Also read: அஜித்தின் விடாமுயற்சி புதிய கெட்டப் இணையத்தில் வைரல்.. கொல மாஸாக இருக்கும் AK, ரஜினி

Trending News