வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் பட வில்லனை லாக் செய்த அஜித்.. சூடு பிடிக்கும் விடாமுயற்சி அப்டேட்

துணிவு படத்தின் தாறுமாறான வெற்றி அஜித்துக்கு இந்த வருடத்தின் நல்ல ஒரு தொடக்கமாக இருந்தது. அதே சூட்டோடு அடுத்த பட வேலையையும் ஆரம்பித்து விட வேண்டும் என்ற அவருடைய எண்ணத்தில் இடி விழுந்த மாதிரி ஒவ்வொரு விஷயமும் நடந்து கொண்டிருக்கிறது. இயக்குனர் மாற்றத்தில் ஆரம்பித்து அடுத்தடுத்த விஷயங்களும் அவருக்கு தடங்கலாகவே இருந்தது.

இருப்பினும் அதையெல்லாம் தாண்டி இயக்குனரை ஓகே செய்த அஜித் விரைவில் படத்தை முடித்துக் கொடுத்து விட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வந்தார். ஏனென்றால் பைக் ரேஸில் ஆர்வம் உள்ள அவர் உலக சுற்றுப்பயணத்திற்கும் திட்டம் போட்டு இருக்கிறார். அதன் காரணமாகவே அவருடைய பிறந்தநாள் ட்ரீட்டாக படத்தின் பெயர் விடாமுயற்சி என்று அறிவிக்கப்பட்டது.

Also read: அகல கால் வைத்ததால் அடியோடு அழிந்த 5 தயாரிப்பு நிறுவனம்.. அஜித் படத்தால் ஏற்பட்ட தோல்வி

இத்தனை மாத முயற்சியின் பலனாக வந்த டைட்டில் அறிவிப்பையே அவருடைய ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வந்தனர். அதைத்தொடர்ந்து எப்போது படம் ஆரம்பிக்கும் என அனைவரும் காத்திருந்த வேளையில் அது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அஜித்தும் படம் ஆரம்பிக்கும் போது கூப்பிடுங்கள் என்று கூறிவிட்டு ஜாலியாக பைக் பயணம் சென்று விட்டார்.

இப்படி பல இடியாப்ப சிக்கல்களுக்கு நடுவில் படத்தை ஆரம்பிக்கலாம் என இருந்த லைக்கா நிறுவனமும் அமலாக்கத்துறையின் ரெய்டில் மாட்டிக் கொண்டது. அதைத்தொடர்ந்து படம் எப்போதுதான் தொடங்கும் என்ற கவலையுடன் அஜித் ரசிகர்கள் நாளை கடத்தி வருகின்றனர். இந்நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் தேர்வு விறுவிறுப்பாக நடக்க தொடங்கி இருக்கிறதாம்.

Also read: பள்ளிப்படிப்பை முடித்த விஜய்யின் மகள்.. மேடையில் கௌரவ படுத்திய குட்டி லியோவின் வைரல் புகைப்படம்

அதில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க விஜய் பட நடிகர் ஒருவரை பட குழு தேர்ந்தெடுத்திருக்கிறார்களாம். அந்த வகையில் மாஸ்டர், கைதி போன்ற படங்களில் வில்லனாக வந்த அர்ஜுன் தாஸ் முதல் முறையாக அஜித்துக்கு வில்லனாக விடாமுயற்சியின் மூலம் களமிறங்க உள்ளார். ஆனால் படத்தில் அஜித்துக்கு மற்றொரு வில்லனும் இருக்கிறாராம்.

அதற்கு மற்ற மொழியில் இருக்கும் டாப் நடிகர் யாரையாவது நடிக்க வைக்கலாம் என முடிவு செய்திருக்கும் தயாரிப்பு தரப்பு தற்போது அதற்கான வேலையில் இறங்கியுள்ளனர். அது மட்டுமின்றி இனிமேல் எந்த தடையும் இல்லாமல் படத்தை ஆரம்பித்த வேகத்தில் முடித்து விட வேண்டும் என்பதிலும் அவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் அஜித்தின் ஆட்டம் விடா முயற்சியுடன் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

Also read: பிரச்சனை இருக்கு என்று தெரிந்தாலே எஸ்கேப் ஆகும் ஏகே.. சர்ச்சை நபர்களை அண்டாத அஜித்

Trending News