வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜய்யுடன் நடித்து மார்க்கெட்டை குறைத்துக் கொண்ட அஜித்.. பிரபலத்திடம் புலம்பி தீர்த்து விட்டாராம்

அஜித் மற்றும் விஜ இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக உள்ளனர். இந்த இரு நடிகர்களுக்கு தான் ரசிகர் கூட்டம் அதிகம். இந்நிலையில் விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி ஒரே நாளில் வெளியாக உள்ளது. இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சாதாரணமாக டாப் ஹீரோக்களின் படங்களில் வேறு ஹீரோக்கள் நடிப்பது அந்த காலத்தில் இருந்தே வழக்கத்தில் உள்ளது. தற்போது கூட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் கமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் விஜய் சேதுபதி, சூர்யா போன்ற முன்னனி நடிகர்களும் அந்த படத்தில் நடித்திருந்தனர்.

Also Read : 6 முறை விஜய், அஜித் பொங்கலுக்கு மோதிக்கொண்ட படங்கள்.. அதிக வெற்றி யாருக்கு தெரியுமா?

அவ்வாறு விஜய், சூர்யா இருவருமே இரண்டு, மூன்று படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். ஆனால் விஜய், அஜித் இருவரும் ராஜாவின் பார்வையிலேயே என்ற படத்தில் மட்டும் தான் இணைந்து நடித்திருந்தார்கள். அந்த நேரத்தில் பத்திரிக்கையாளர் பிஸ்மி அஜித்திடம் இப்போது தான் வளர்ந்து வரும் நேரத்தில் விஜய் படத்தில் ஏன் நடிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அஜித் இப்போது எனக்கு பணரீதியாக பிரச்சனை இருப்பதாகவும், மருத்துவ ரீதியாகவும் பிரச்சனை உள்ளது. அதை சமாளிக்க எனக்கு இந்த படம் தேவைப்படுவதாக அஜித் கூறியுள்ளார். படம் வெளியான பிறகு அதே பத்திரிக்கையாளருக்கு அஜித் போன் செய்து பேசி உள்ளார்.

Also Read : எம்ஜிஆர், ரஜினி வரிசையில் விஜய்யை போடலனா கண்டமேனி திட்டுவாரு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கும் பிரபலம்

அதாவது நீங்கள் சொன்னது சரிதான், தேவையில்லாமல் நான் இந்த படத்தில் நடித்து விட்டேன். என்னை விட இந்த படத்தில் விஜய்க்கு தான் காட்சிகள் அதிகம் உள்ளது. மேலும் அந்த படத்தில் விஜய்க்கு சம்பளம் 3 லட்சம், அதுவே எனக்கு மிகக் குறைவு தான். அந்த பணம் மருத்துவத்திற்கே செலவாகிவிட்டது என்று புலம்பி உள்ளார்.

இதைத்தொடர்ந்து ராஜாவின் பார்வையிலே படம் வெளியான ஒரு வருடத்திற்கு பிறகு மேடையில் அஜித் பேசும் போது, விஜய் உடன் நடிக்கும் போது அவரது அம்மா எனக்கும் சாப்பாடு எடுத்துட்டு வருவது என்னால் மறக்க முடியாது என்ற புகழ்ந்து பேசி இருந்தாராம். இந்த செய்தியை வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.

Also Read : போனி கபூருக்கு தோல்வி பயத்தை காட்டிய வாரிசு டிரைலர்.. அஜித் சொன்ன ஒரே வார்த்தை!

Trending News