வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த சம்பள இடத்தை பிடித்த அஜித்.. நஷ்டம்னு தெரிஞ்சே தலையை விட்ட முதலாளி

Ajith Salary: அஜித் இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். எப்போதோ ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய படம் பல்வேறு குளறுபடிகளால் இவ்வளவு மாதங்கள் தாமதம் ஆகி இருக்கிறது. அதனாலேயே அஜித் இப்போது படத்தை விரைந்து முடிக்க சொல்லி கண்டிஷன் போட்டு இருக்கிறாராம்.

அப்பொழுதுதான் அவர் அடுத்த பட ஷூட்டிங்கில் பங்கேற்க முடியும். அந்த வகையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் அஜித்தின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதன் மூலம் அவர் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த இடத்தையும் பிடித்துள்ளார்.

அதாவது மைத்ரி மூவி மேக்கர்ஸ் தற்போது அடுத்த படத்திற்காக அஜித்துக்கு 163 கோடி சம்பளம் பேசி இருக்கிறது. அதில் 25 கோடி அட்வான்சும் கொடுத்தாகிவிட்டது. 163 கோடி எதற்கு ரவுண்டாக 165 என்று கொடுத்திருக்கலாமே என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம்.

Also read: மகிழ் திருமேனிக்கு நெருக்கடி கொடுக்கும் அஜித்.. சலசலப்பாக மாறிய விடாமுயற்சி படப்பிடிப்பு

ஆனால் அஜித்துக்கு 1 என்பது ராசியான எண்ணாக இருக்கிறது. அதனாலேயே இந்த சம்பளத்தை அவர் பிக்ஸ் செய்திருக்கிறாராம். இதன் மூலம் அவர் ரஜினிக்கு அடுத்ததாக அதிக சம்பளம் வாங்கும் நடிகர் பட்டியலில் இணைந்திருக்கிறார்.

ஆனால் இந்த சம்பள விஷயத்தில் இன்னொரு உள்குத்தும் இருக்கிறது. அதாவது அஜித் படங்களின் தற்போதைய வியாபார நிலவரம் என்று பார்த்தால் 250 கோடி தான். அதில் அவருக்கான சம்பளம் போக மற்ற பட்ஜெட் எல்லாம் சேர்த்தால் 300 கோடி வருகிறது.

அப்படி பார்த்தால் தயாரிப்பு தரப்புக்கு 50 கோடி நஷ்டம். இதனாலேயே இப்படத்தை முதலில் தயாரிக்க இருந்த சத்யஜோதி பிலிம்ஸ் ஜகா வாங்கி விட்டதாம். அதை அடுத்து இப்போது நஷ்ட கணக்கு தெரிந்தே தலையை விட்டு இருக்கிறது மைத்ரி நிறுவனம். இதுதான் இப்போது கோலிவுட்டின் சூடான செய்தியாக இருக்கிறது.

Also read: விஜய்க்கு ஆப்பு அடிக்க போகும் அஜித்..! கட்டதுரைக்கு கட்டம் சரியில்லன்னு உரைத்த பிரபலம்

Trending News