2006-ல் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித்குமார், அசின், கணிக போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் வரலாறு, இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருப்பார்.
விமர்சன ரீதியாக எதிர்பார்த்த வெற்றி இல்லாவிட்டாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது இந்த படம். கிட்டத்தட்ட 12 கோடிக்கு எடுக்கப்பட்டு, 25 கோடி வரை வசூல் செய்துள்ளது.
அஜித்குமார் 3 கதாபாத்திரத்தில் அப்பா இரண்டு மகன்களான நடித்திருப்பார். இதில் குழந்தை நட்சத்திரமாக அஜித்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஜீவா என்ற கதாபாத்திரம் முக்கியமாக பார்க்கப்பட்டது.
ஜீவா கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிறுவன் உண்மையான பெயர் சச்சின் லட்சுமண். குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ள இந்தப் படத்தை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.