வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித்தால் பல கோடி டீல் பேசிய இந்திய ராணுவம்.. தக்‌ஷா டீமுக்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட்

Ajithkumar – Dhaksha Team: நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி பல விஷயங்களிலும் ஆர்வமுடையவர். இவர் ஒரு பைக் ரேஸராக இருந்தவர் என அனைவருக்கும் தெரியும். இன்று வரை பைக்கில் தனியாக நெடுந்தூரம் பயணம் செய்வது என்பது இவருக்கு ரொம்பவும் பிடித்த விஷயம். அதேபோல் அஜித்குமார் வருடந்தோறும் துப்பாக்கி சூடும் போட்டியிலும் கலந்து கொள்கிறார்.

நடிகர் அஜித்குமார் தன்னுடைய பைக்கில் நெடுந்தூர பயணம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதேபோன்று அவருக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக மற்றொரு விஷயம் நடந்திருக்கிறது. தற்போது அஜித் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள்.

Also Read:அஜித்தின் ஆஸ்தான இயக்குனரை தூக்கிவிடும் சல்மான் கான்.. 2024-ஐ குறி வைத்த மெகா கூட்டணி

அண்ணா பல்கலைக்கழகத்தின் ட்ரோன் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் உருவாக்க பணிகளின் குழுவிற்கு நடிகர் அஜித்குமார் தான் மெண்ட்டராக இருக்கிறார். பல தேசிய அளவிலான போட்டிகளிலும் இந்த குழு கலந்து கொண்டிருக்கிறது. மேலும் 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தின் போது தக்‌ஷா என பெயரிடப்பட்ட இந்த குழு தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றியது.

இந்த குழுவுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் ஒரு பெரிய ஒப்பந்தம் தற்போது நடந்திருக்கிறது. இந்திய ராணுவம் தானாக முன்வந்து இந்த குழுவிடம் 200 போன்கள் தயாரிப்பதற்கான இடத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. இதற்கு 160 கோடியும் பட்ஜெட்டாக ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அஜித்குமார் மென்டாராக இருக்கும் தக்க்ஷா குழுவுக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பது அவருடைய ரசிகர்களுக்கு ரொம்பவும் பெருமையான விஷயமாக இருக்கிறது.

Also Read:மத்தவனா இருந்தா பக்கவாதம் வந்திருக்கும்.. உயிரைப் பனையம் வைத்து அஜித் செய்யும் காரியம்

சமீபத்தில் தான் நடிகர் அஜித்குமார் பைக் ரைட் கம்பெனி ஒன்றையும் தொடங்கியிருந்தார். இந்த கம்பெனியின் மூலம் நெடுந்தூரம் பைக்கில் பயணம் செய்ய விரும்புவோருக்கு வழிகாட்டுதலும் அளிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தன்னைப் போல பைக் ரைடில் ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்றுதான் அஜீத் இதை செய்திருக்கிறார்.

அஜித் குமாருடன் படம் பண்ண பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரிசை கட்டிக் கொண்டு காத்திருக்கிறார்கள். இன்றளவும் அவருடைய ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி அஜித் தனக்கு பிடித்த விஷயத்தை செய்து சந்தோஷப்பட வேண்டும் என்பதில் ரொம்பவும் உறுதியாக இருக்கிறார்.

Also Read:புத்தகக் கதைகள் மூலம் உருவாக்கப்பட்ட 6 படங்கள்.. அஜித்துக்கு ஹிட் கொடுத்த அந்த படம்

Trending News