வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கோலிவுட் கொண்டாடிய ஆதிக் கல்யாணம்.. ஹீரோயின் லுக்கில் செமையா வந்த அஜித், ஷாலினியின் மகள்

Adhik Ravichandran Marriage: தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். மார்க் ஆண்டனி என்னும் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன்வசம் இழுத்துவிட்டார். இவர் ஏற்கனவே திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியானது. அதை தொடர்ந்து இவர்கள் இருவருக்குமே இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்று இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ் சினிமா கலைஞர்களும் இன்று நடிகர் பிரபுவின் மகள் திருமணத்தில் தான் இருந்திருக்கிறார்கள்.

நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படம் முடிந்த கையோடு அவருடைய 63 வது படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக செய்திகள் வெளியானது. ஏற்கனவே இவர்கள் இருவரும் நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். மார்க் ஆண்டனி வெற்றிக்கு பிறகு, இந்த கூட்டணிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

Also Read:சிவாஜி வீட்டு மருமகனான ஆதிக் ரவிச்சந்திரன்.. கோலாகலமாக நடந்த திருமணம், வைரல் புகைப்படங்கள்

மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணத்திற்கு நடிகர் அஜித்குமார் வருவார் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. மேலும் அஜித் நடிகர் பிரபுவின் குடும்பத்திற்கும் நெருக்கமானவர். ஆனால் அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவரால் அஜர் பைஜானிலிருந்து சென்னைக்கு வர முடியவில்லை.

மகளுடன் வந்த ஷாலினி அஜித் குமார்

இருந்தாலும் அஜித் சார்பாக அவருடைய மனைவி ஷாலினி, ஷாலினியின் தங்கை ஷாமிலி, அஜித் ஷாலினி தம்பதியின் மகள் அனோஷ்கா இந்த திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். பிங்க் நிறத்தில் பச்சை பார்டர் போட்ட பட்டு புடவையில் ஷாலினி அணிந்திருக்க, அவருடைய மகள் சல்வார் காமிக்ஸ் அணிந்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரல் ஆகி வருகிறது.

Shalini marriage
Shalini marriage

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். ஆதிக் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து வந்த நிலையில் இந்த திருமணம் இரு வீட்டாரால் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்றிருக்கிறது. ஏகே 63 படத்தை பற்றி விரைவில் ஆதிக் ரவிச்சந்திரன் அறிவிப்பார் என அஜித் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:அஜித்தின் ட்ரெண்ட்டை மாற்றப் போகும் பிரபுவின் மருமகன்.. கேட்கவே காமெடியாக இருக்கு

Trending News