தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் வரிசையில் இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் கொண்டாட தவறுவதில்லை. அந்தளவிற்கு இவர் மீதான அன்பு, பாசம் வைத்துள்ளனர் இவரது ரசிகர்கள்.
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஓரளவு வரவேற்பு பெற்று ரசிகர்களிடம் பாராட்டை வாங்கியது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியாக உள்ள வலிமை படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இப்படி இருக்கும் நிலையில் வெங்கட்பிரபு சமீபத்திய பேட்டி ஒன்றில் மங்காத்தா படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை கூறியுள்ளார்.

ஒரு நாள் வெங்கட் பிரபு காரில் போய்க் கொண்டிருக்கும் போது அவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அந்த கால் பண்ணது நம்ம அஜித்குமார். அப்போது அஜித் வெங்கட் பிரபுவிடம் ஏதாவது ஸ்கிரிப்ட் இருந்தா சொல்லுங்க என கூறியுள்ளார்.
அதன்பிறகு போனிலேயே வெங்கட் பிரபு கதையை கூறியுள்ளார். அஜித் கதையை போன் பண்ணி கேட்டது மிகப்பெரிய சர்ப்ரைசாக இருந்ததாக வெங்கட் பிரபு கூறியுள்ளார். மேலும் மங்காத்தா படம் அஜீத்தின் 50வது படமாக இருப்பதுவும் தனக்கு பெருமையாக இருந்தது எனவும் கூறியுள்ளார்.
அதேபோல் இந்த படத்தில் முதலில் அர்ஜுன் ரோலுக்கு பதிலாக நாகர்ஜுனா தான் நடிக்க வேண்டியதாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.