வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அஜித் படத்தை ரீமேக் பண்ணும் சல்மான் கான்.. கதாநாயகியாக விஜய் பட நடிகை

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வீரம் திரைப்படத்தின ஹிந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தளபதி விஜய் படத்தில் நடித்த பிரபல நடிகை இத்திரைப்படத்தில் தமன்னாவின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீஸான வீரம் திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றுத் தந்தது. இந்த வெற்றியை அடுத்து தல அஜித்துக்கு மார்க்கெட் அதிகமானது. மேலும் இத்திரைப்படத்தை தெலுங்கில் காட்டமராயுடு என்று ரீமேக்கில் பிரபல நடிகர் பவன் கல்யாண் நடித்து அசத்தினார். இதனிடையே தற்போது ஹிந்தியில் இத்திரைப்படத்தை ரீமேக் செய்வதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் பர்ஹாத் சம்ஜி இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீரம் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு கபி ஈத் கபி தீவாளி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வருடம் கடைசியில் இத்திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படத்தில் கதாநாயகியாக தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்டே சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார். ஏற்கனவே பூஜா ஹெக்டே, ஹிந்தியில் ஹவுஸ்ஃபுல் ஹவுஸ்ஃபுல்4, மோகன்ஜாத்தாரோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நிலையில், தற்போது தமிழ் தெலுங்கில் நடிப்பதில் பிஸியாக இருந்தார். இதனிடையே பூஜா ஹெக்டே தற்போது மீண்டும் ஹிந்தியில் கம்பேக் கொடுக்கவுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் வீரம் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க ஹிந்தியில் பிரபல நடிகைகளில் யாரும் முன்வரவில்லை என்றும் அரசல்புரசலாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் ரீமேக் திரைப்படங்களில் நடிப்பதற்கு பாலிவுட்டில் உள்ள பிரபல நடிகைகள் யாரும் அந்த அளவுக்கு ஆர்வம் காட்டுவதில்லையாம்.

இதனிடையே தற்போது நடிகர் சல்மான்கான் டைகர், பத்தான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் கபி ஈத் கபி தீவாளி திரைப்படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். ஏற்கனவே நடிகர் சல்மான்கான் தளபதி விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்த நிலையில் தற்போது தல அஜித்தின் வீரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Trending News