வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கதை கிடைக்காமல், ஹாலிவுட் பக்கம் சென்ற அஜித்.. விடாமுயற்சி எந்த படத்தின் தழுவல் தெரியுமா?

Vidaamuyarchi: நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக தவமாய் தவம் கிடப்பது விடாமுயற்சி படத்திற்கான அப்டேட்டுக்காக தான். படத்தின் டைட்டில் மற்றும் இயக்குனரை தவிர வேறு எதுவுமே உறுதியான தகவலாக இதுவரை வெளியாகவில்லை. இது ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றமாகவே இன்று வரை இருந்து வருகிறது. மற்ற ஹீரோக்களின் படங்கள் எல்லாம் அடுத்தடுத்த ரிலீசுக்காக காத்திருக்கும் நிலையில், இந்த படம் மட்டுமே அப்படியே கிடப்பில் கிடந்தது.

இந்த படவேலைகள் தொடங்கப்படாமல் இருக்க அஜித் தான் காரணம், அவர் பைக் ரைட் சென்றிருப்பதால் தான் படப்பிடிப்புகள் தாமதமாகிறது, லைக்காவிற்கு பண சிக்கல், அதனால் மற்ற படங்களை முடித்துவிட்டு தான் இந்த கதையை எடுப்பார்கள் என்று பல செய்திகள் வெளியானது. உண்மையில் அஜித்திற்கு இயக்குனர் மகிழ் திருமேனி சொன்ன கதைகளின் திருப்தி இல்லாததுதான் தாமதத்திற்கு காரணமாம்.

Also Read:ஐஸ்வர்யா ராய்க்கு ஆசைப்பட்டு மொத்த வாய்ப்பையும் பறிக்கொடுத்த நடிகர்.. சாதுரியமாக அஜித் வாங்கிய வாய்ப்பு

எப்படியும் மகிழ் திருமேனி நல்ல கதையை சொல்லிவிடுவார் என பொறுத்து பொறுத்து பார்த்து இருந்திருக்கிறார் நடிகர் அஜித். ஒரு கட்டத்தில் இனி இது வேலைக்காகாது என்று தெரிந்த பின் ஏதாவது ஒரு ஹாலிவுட் படத்தை தழுவி கதை எழுதுங்கள் என்று சொல்லிவிட்டாராம். இதற்காக இயக்குனர் மாதகணக்காக பல ஹாலிவுட் படங்களை பார்த்திருக்கிறார்.

இறுதியாக தற்போது ஒரு ஹாலிவுட் படத்தை தேர்ந்தெடுத்து, அதன் கதையையும் அஜித்திடம் சொல்லி இருக்கிறார். அஜித்திற்கும் கதை பிடித்து போய்விட, தற்போது அதை தழுவி தமிழுக்கு ஏற்றது போல் கதையை மாற்றி எழுதி வருகிறாராம் இயக்குனர் மகிழ் திருமேனி. இதனால் படப்பிடிப்பு வேலைகளும் அடுத்தடுத்து தொடங்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

Also Read:அட்லீக்கு மட்டும் கிடைக்கும் மாலை, மரியாதை.. கண்டுகொள்ளாமல் கை கழுவி விடப்பட்ட அஜித் நண்பர்

சமீபத்திய தகவலின் படி,கர்ட்ரஸ்ஸல் நடித்து 1997ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் பிரேக்டவுன். சூப்பர் ஹிட் அடித்த இந்தப் படத்தின் கதையைத் தழுவித்தான், அஜித்தின் விடாமுயற்சி உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் ஒரு ஹாலிவுட் படத்தை காப்பியடித்து தான் அஜித் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் எப்போதுமே நேரடி தமிழ் படங்களில் நடித்து மாஸ் காட்டும் நடிகர். எனவே இது வெறும் வதந்தி தான். கண்டிப்பாக ஹாலிவுட் கதையின் அஜித் நடிக்க மாட்டார் என பிரபலங்கள் பலரும் சொல்லி வருகிறார்கள்.

Also Read:அஜித்துக்கு ஆக்சன் சொல்லப்போகும் மகிழ் திருமேனி.. விடாமுயற்சி சூட்டிங் எப்போது தெரியுமா?

Trending News