புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஒரு வழியா முடிவுக்கு வந்த அஜித்தின் விடாமுயற்சி .. அட போங்கடா என டேக்கா கொடுத்த த்ரிஷா

Vidaamuyarchi Movie Update: நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படத்திற்கு பிறகு அவருடைய அடுத்த படமான விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட்டிற்காக அவருடைய ரசிகர்கள் காத்திருந்து அலுத்து போய் விட்டார்கள். உண்மையை சொல்லப் போனால் இப்படி ஒரு படம் இருக்கிறது, இதனுடைய அப்டேட் வேண்டும் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மறந்து விட்டது என்று கூட சொல்லலாம். உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமலஹாசன், மற்றும் தளபதி விஜய் ஆகியோர் தங்களின் அடுத்தடுத்த படங்களுக்கான அப்டேட்டுகளை இப்போது கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த நிலையில் தான் விடாமுயற்சி படத்தின் புதிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி திரை கதையை தயாரிப்பாளர் சுபாஷ்கரனிடம் சொல்லி ஓகே வாங்கி விட்டாராம். இதுவரை கதை கேட்காமல் இருந்த நடிகர் அஜித்குமார் கதையைக் கேட்டு சம்மதம் சொல்லிவிட்டாராம். இதனால் படத்தின் ஒரு முக்கியமான வேலை முடிந்து இருக்கிறது.

Also Read:மாசக்கணக்கில் காக்க வைத்த விடாமுயற்சி.. 13 வருடங்களுக்குப் பிறகு டபுள் ட்ரீட் கொடுக்க போகும் அஜித்

ஏற்கனவே இந்த படத்திற்காக விக்னேஷ் சிவன் கதை சொல்லி அதில் திருப்தி இல்லாமல் தான் அஜித் அவரை நீக்கிவிட்டார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது மகிழ்ந்திருமேனி சொன்ன கதை நடிகர் அஜித்குமாருக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டதாம். இதனால் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மற்றொரு சிக்கல் இந்த படத்திற்கு ஆரம்பித்து இருக்கிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்து விட்டதால் முன்னணி ஹீரோக்கள் பலரும் அவர்களுடைய படங்களில் த்ரிஷாவை நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். திரிஷா லியோ வில் ஒப்பந்தமாகும் பொழுதே, அடுத்து அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் இவர் தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டு விட்டது. அதற்காக த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தையும் நடந்தது.

Also Read:பட வாய்ப்புக்காக நாய்க்குட்டியை தூக்கிட்டு நாலு நாள் அலைந்து திரிந்த எஸ் ஜே சூர்யா.. சுக்கு நூறாக உடைந்து போன அஜித்

ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியும் இந்த படத்தைப் பற்றி எந்த தகவலும் இல்லை. த்ரிஷாவுக்கு படத்தில் ஒப்பந்தமானதற்கான அட்வான்ஸ் கொடுக்கப்படவில்லை. இதனால் காத்திருந்து பார்த்த த்ரிஷா இது செட் ஆகாது என அடுத்தடுத்த படங்களுக்கு தன்னுடைய கால் சீட்டுகளை கொடுத்து விட்டார் தற்போது விடாமுயற்சி பட குழு த்ரிஷாவிடம் மீண்டும் பேசி இருக்கிறது.

ஆனால் திரிஷா அடுத்தடுத்த படங்களுக்கு கால்ஷுட்டுகள் கொடுத்து விட்டதால் இப்போது இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் விடாமுயற்சி படக்குழு மீண்டும் த்ரிஷாவிடம் பேசிப் பார்க்கலாமா அல்லது வேறு ஏதாவது ஹீரோயினை நடிக்க வைக்கலாமா என டிஸ்கஷன் செய்து வருகிறார்கள். எல்லாம் முடிந்த நிலையில் தற்போது கதாநாயகி பிரச்சனை விடாமுயற்சி படத்திற்கு பூதாகரமானதாக மாறியிருக்கிறது.

Also Read:மலை ஏறினாலும் மச்சான் தயவு வேண்டும்.. அஜித்தால் நொந்து போன ரிச்சர்ட்

Trending News