செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

அஜித்தின் 63வது பட இயக்குனர் பிரபுவின் மருமகன் தான்.. 100% உறுதி செய்த சுரேஷ் சந்திரா

Ajith 63Movie: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட இப்படம் இந்த நேரத்திற்கு ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது தான் படப்பிடிப்பை சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்கு காரணம் துணிவு படத்தை முடித்த கையோடு படப்பிடிப்பை ஆரம்பிக்காமல் பத்து மாதமாக இழுத்து அடித்தது.

இதனை எடுத்து ஒரு வழியாக விடாமுயற்சி படப்பிடிப்பு சுமுகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான 63வது படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி நாலா பக்கமும் எழும்பியது. இதில் தெலுங்கு இயக்குனரான கோபிசந்த் மலினேனி இவருடன் கூட்டணி வைப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இது முற்றிலும் வதந்தி தான் என்று இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா.

அடுத்தபடியாக அஜித்தின் 63வது படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி வைக்கப் போகிறார். இவர் ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும் போதே அஜித்திடம் ஒன்லைன் ஸ்டோரியை சொல்லி இருக்கிறார். அப்பொழுது அஜித் கதை நன்றாக இருக்கிறது. இன்னும் இதை டெவலப் பண்ணி கொண்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டார்.

Also read: கஜினி சஞ்சய் ராமசாமி ஆக அஜித்தின் வைரல் போஸ்டர்.. இதுதான் முருகதாஸுக்கும் இவருக்கும் ஏற்பட்ட விரிசலா?

இதனை அடுத்து சமீபத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் மார்க் ஆண்டனி படத்தை எடுத்து அஜித் மனதில் இடத்தைப் பிடித்து விட்டார். இதனால் அஜித்தின் முழு கவனமும் தற்போது இளம் இயக்குனரான ஆதிக் மீது திரும்பி விட்டது. அத்துடன் இவர்கள் கூட்டணியில் ரெடியாக போகும் படம் முக்கால்வாசி காமெடிக்கு பஞ்சமே இல்லாத அளவிற்கு நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கப் போகிறது.

அந்த வகையில் இதுவரை அஜித் நடிக்காத ஒரு புதுவிதமான நடிப்பை இந்த படத்தில் எதிர்பார்க்கலாம். இதற்கிடையில் விடாமுயற்சி படத்தை முடித்துவிட்டு, கையோடு ஆதிக் கூட்டணியில் இணையப் போகிறார். இப்படத்திற்காக 75 நாள் கால் சீட்டை கொடுத்திருக்கிறார். அதற்குள் ஆதிக்கும் மணமகனாக மாறப் போகிறார். அதாவது இவருக்கும் பிரபுவின் மகளுக்கும் டிசம்பர் 15ஆம் தேதி திருமணம் நடைபெறப்போகிறது.

அதனால் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணத்திற்கு பெரிய கிப்ட் என்றால் அஜித் கமிட்டாகி இருக்கும் படம்தான். இனி இயக்குனர் ஆதிக் மட்டுமில்லாமல் பிரபுவின் மருமகன் என்கிற அந்தஸ்துடனும் வெற்றி நடை போட போகிறார். மேலும் ஆதிக் மற்றும் அஜித் இணையும் 63 வது படத்திற்கு தெலுங்கு தயாரிப்பாளர் மைத்திரி மூவிஸ் தயாரிக்கப் போகிறார்கள். அந்த வகையில் அஜித் இதுவரை வாங்காத சம்பளத்தை விட அதிகமாக இந்தப் படத்திற்கு வாங்கப் போகிறார்.

Also read: ரஜினி, கமல் தான் இத பண்ணுவாங்களா.? பேராசையில் அஜித்தை தூதுவிடப் போகும் விஜய்

Trending News