திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித்துடன் இணைந்த தீனா பட நடிகர்.. வெளிவந்த ஏகே 61 ஸ்பெஷல் அப்டேட்

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஏகே 61 திரைப்படத்தில் நடித்துவருகிறார். போனிகபூர் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். வலிமை திரைப்படத்திற்கு பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த செய்தி வெளியாகி சில நாட்களாக அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

தற்போது தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சமுத்திரகனி இந்த திரைப்படத்தில் அஜித்துடன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. அதைத் தொடர்ந்து தற்போது மற்றொரு பிரபலமும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல வில்லன் கேரக்டர்களில் மிரட்டி வந்த மகாநதி சங்கர் தற்போது அஜித்துடன் இணைந்துள்ளார். இவர் பல வருடங்களுக்கு முன்பாக அஜித்துடன் தீனா திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார். அதில் படம் முழுக்க அஜித்துடன் வருவது போன்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்து இருப்பார்.

சொல்லப்போனால் அஜித்தை தல என்று முதன்முதலில் கூப்பிட்டதும் இவர்தான். அதன் பிறகுதான் அந்தப் பெயர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. அப்படிப்பட்ட பெருமையைக் கொண்ட இவர் தற்போது ஏகே 61 திரைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

மேலும் இவர் படப்பிடிப்பில் பங்கேற்ற போது அஜித் ஷூட்டிங் ஸ்பாட்டில் சங்கரை பற்றி தெரியாத சிலருக்கு அறிமுகப்படுத்தி வைத்து உள்ளார். அதோடு தீனா படத்தில் அவர் தல என்று கூறியதை குறிப்பிட்டும் பேசினாராம். இதனால் மகாநதி சங்கர் தற்போது மகிழ்ச்சியில் இருக்கிறார். இதுமட்டுமல்லாமல் விரைவில் ஏகே 61 பற்றிய ஸ்பெஷல் அப்டேட்களும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News