புதன்கிழமை, ஜனவரி 15, 2025

2 சூப்பர் ஹிட் பட இயக்குனரை கழட்டி விட்ட அஜீத்.. வேறு வழியில்லாமல் அறிமுக நடிகருடன் கூட்டணி

தல அஜித்துக்கு அவருடைய கேரியரில் ஸ்டைலிஷான படங்களை கொடுத்த இயக்குனர் ஒருவர் அஜித்தின் பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்து தற்போது கிடைக்காத விரக்தியில் அறிமுக நடிகருடன் கூட்டணி போட உள்ளாராம்.

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் அஜித். இவருடன் படம் செய்ய பல இளம் இயக்குனர்கள் தவம் கிடக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் தல அஜித் மற்ற நடிகர்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமானவர்.

ஒரு இயக்குனரை பிடித்து விட்டால் அவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளைக் கொடுத்து விடுவார். அந்த வகையில் தற்போது சிறுத்தை சிவா மற்றும் வினோத் ஆகியோர் தவிர்க்க முடியாத தமிழ் இயக்குனர்களாக வலம் வருகின்றனர். அஜித்தின் வலிமை படம் விரைவில் வெளியாக உள்ளது.

அதேபோல் ஒரு காலத்தில் அஜித்தின் பிடித்தமான இயக்குனராக வலம் வந்தவர் தான் விஷ்ணுவர்தன். அஜித்தின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த பில்லா, ஸ்டைலிஷ் பிளாக்பஸ்டர் ஆரம்பம் போன்ற படங்களை கொடுத்தவர்.

விஷ்ணுவர்தன் நீண்ட நாட்களாகவே அஜீத்தை வைத்து ஒரு சரித்திரப் படத்தை எடுக்க வேண்டும் என பலமுறை அஜீத்தை சந்தித்து படவாய்ப்புகள் கேட்டுள்ளார். ஆனால் அஜித் அந்த மாதிரி கதைகளில் நடிக்க ஆர்வம் இல்லை என்று கூறி விட்டாராம்.

இதனால் அஜித்துக்காக வேறு கதைகளை எழுதிக் கொண்டு சென்றபோதும் அஜித் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோவின் மருமகன் ஆகாஷ் முரளி என்பவரை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளாராம். இவர் மறைந்த முன்னாள் நடிகர் முரளியின் மகன் மற்றும் தற்போதைய இளம் நடிகர் அதர்வாவின் தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது.

master-production-next-movie-announcement
master-production-next-movie-announcement

Trending News