புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அஜித்தின் மூளையை சலவை செய்யும் சிறுத்தை சிவா.. வேறு வழி இல்லாமல் கிரீன் சிக்னல் கொடுக்கப் போகும் ஏகே

Ajith’s brainwashed did Siruthai Shiva: அஜித்தின் துணிவு படம் கடந்த வருடம் வெளிவந்ததை ஒட்டி கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகள் ஆகியும் விடாமுயற்சி படப்பிடிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குக் காரணம் அஜித்தின் அலட்சியமான பல விஷயங்கள் தான். ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து அதன்படி செயல்பட வேண்டும் என்று நினைக்கக் கூடியவர் அல்ல. ஏதோ போற போக்குல ஒரு படத்தை நடித்து கொடுத்துட்டு போகலாம் என்ற மனநிலை கொண்டவர்.

அப்படிப்பட்ட இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த படத்திற்காக தற்போது 105 கோடி சம்பளத்தை பெற்றிருக்கிறார். ஆனால் இனி அடுத்து நடிக்கப் போகும் படங்களில் 170 முதல் 200 கோடி வரை சம்பளம் வேண்டும் என்று ஒரு டிமாண்ட் வைத்திருக்கிறார். ஒவ்வொரு நடிகர்களும் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் சம்பளத்தை அதிகரிப்பது வழக்கம் தான்.

ஆனால் அஜித் எடுத்தவுடனேயே சம்பளத்தை அதிகளவில் உயர்த்தியது பல தயாரிப்பாளர்களுக்கும் புளியை கரைத்து விட்டது. அந்த வகையில் அஜித்தின் விடாமுயற்சி படத்திற்குப் பிறகு அடுத்த படத்தை சிறுத்தை சிவா தான் இயக்கப் போகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப் போவதாக பல பேச்சுக்கள் அடிபடுகிறது.

Also read: அஜித்துன்னா கசக்குது, சூர்யான்னா இனிக்குதா?. சுயநலமான உலகம் டா சாமி

அஜித், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிப்பதற்கு சம்மதத்தை கொடுப்பாரா என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் அஜித்துக்கு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு கீழ் நடிப்பதற்கு பெருசாக இஷ்டம் இருக்காது. ஆனால் அஜித் எதிர்பார்க்கும் சம்பளத்தை தற்போது எந்த தயாரிப்பாளர்களும் கொடுக்க முன்வரவில்லை.

அப்படி என்றால் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படம் என்னவாக போகும் என்பது அவருக்கே ஒரு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் சிறுத்தை சிவா தற்போது அவருக்கு சாதகமாக காரியம் நடக்க வேண்டும் என்பதால் அஜித்தின் மூளையை சலவை செய்து வருகிறார்.

அதாவது அஜித்திடம் நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளத்தை அடைய வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்று சிறுத்தை சிவா அவரிடம் பேசி வருகிறார். அதனால் அஜித்துக்கும் வேறு வழி இல்லை, சம்பளம் அதிகமாக வேண்டுமென்றால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் நடித்தால் மட்டுமே முடியும். அதனால் தற்போது சிறுத்தை சிவா சொன்னபடி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் நடிப்பதற்கு கிரீன் சிக்னல் கொடுக்கப் போகிறார்.

Also read: அஜித்தை வளைக்க முயற்சி செய்யும் பிஜேபியின் கருப்பு ஆடு.. விஜய்யின் அரசியல் நகர்வால் போடப்படும் புது பிளான்

Trending News