நடிகர் அஜித் பொதுவாகவே தான் நடிக்கும் படங்களின் கதை, காட்சிகள், வசூல் உள்ளிட்டவைகளை கவனமாக பார்த்து படங்களில் கமிட்டாக கூடியவர். இதில் எதாவது ஒன்று சரியில்லை என்றாலும் அப்படத்திலிருந்து அவரோ அல்லது சக பிரபலங்களையோ எதை பற்றியும் யோசிக்காமல் நீக்கிவிடுவார். உதாரணமாக அஜித்தின் ஏகே62 படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவனின் கதை, அஜித்துக்கு பிடிக்காமல் போக அவரையே இப்படத்திலிருந்து விலக்கினார் அஜித்.
அந்த அளவிற்கு ஒரு படத்தில் நடிக்க அஜித் பல விஷயங்களை பார்த்து, பார்த்து செய்யக்கூடியவர். அந்த வகையில் தற்போது ஏகே62 படத்தில் புதிதாக இணைந்துள்ள இயக்குனர் மகிழ்திருமேனி அஜித்திடம் கதை கூறி சம்மதம் வாங்கியுள்ளார். இருந்தாலும் இப்படத்தின் அதிகாரபூர்வ அப்டேட் வரமால் உள்ளது பலருக்கும் கேள்வியை எழுப்பியுள்ளது.
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா தான் ஏகே62 படத்தின் அப்டேட்டை தராமல் உள்ளது என பலரும் நினைத்த நிலையில், இதற்கான காரணம் அஜித் தான் என செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித், தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசத்தை காண்பிக்க வேண்டி பல முயற்சிகள் எடுப்பார். உதாரணமாக உடலை குறைப்பது, அதிகரிப்பது, தனது முகம், தாடி, மீசை உள்ளிட்டவை மெருகேற்றுவது என அனைத்தும் செய்வார்.
அதுமட்டுமில்லாமல் அந்த படத்தை இயக்கும் இயக்குனர்களுக்கு படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே பல கண்டிஷன்களை போட்டுவிட்டு சம்மதம் வாங்கிவிட்டு தான் அப்படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொள்வார். அந்த வகையில் ஏகே 62 படத்தை இயக்க உள்ள மகிழ் திருமேனிக்கு, அஜித் புது கண்டிக்ஷன் ஒன்றை போட்டுள்ளார். இயக்குனர் மகிழ்திருமேனி இதுவரை கழகத்தலைவன், தடம், உள்ளிட்ட 5 படங்களை தமிழில் இயக்கியுள்ளார்.
Also Read: கதை காப்பிக்கு கொடுத்த புது விளக்கம்.. விஜய், அஜித் இயக்குனர்களின் மாறுபட்ட சிந்தனை
இதில் அஜித்திற்கு பிடித்த படங்கள் என்றால் அருண்விஜய் நடித்த தடம் மற்றும் தடையறத் தாக்க திரைப்படம் தான். இப்படங்களில் அதிகமான ஆக்ஷன் காட்சிகள் இல்லாத போதும் இரு படங்களும் வேற லெவல் ஹிட் எனலாம். ஆனால் அஜித்தின் படங்கள் என்றாலே ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளுக்கு குறைவே இருக்காது. அந்த வகையில் மகிழ்திருமேனி அஜித்திடம் சொன்ன முழு கதையில் ஆக்ஷன் காட்சிகள் கம்மியாக உள்ளதாக அஜித் தெரிவித்தாராம்.
இதனிடையே துணிவு படம் போல் படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை அக்ஷன் காட்சிகள் இருப்பது போல, படத்தின் கதையை மெருகேற்றுங்கள் என அஜித் மகிழ்திருமேனியிடம் கண்டிஷனுடன் தெரிவித்துள்ளாராம். அஜித்தின் இந்த கண்டிஷனுக்கு சம்மதம் தெரிவித்த மகிழ் திருமேனி, தற்போது இப்படத்தின் கதையை அதிக ஆக்ஷன் கலந்து மெருகேற்றி வருகிறாராம். இதன் காரணமாகத்தான் ஏகே62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளியாகாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.