சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

குட் பேட் அக்லியில் இணையும் அஜித்தின் டார்லிங்.. ஆக்சன்ல பட்டையை கிளப்பபோகும் இயக்குனர்!

Ajith’s Darling sj suraya joins Good Bad Ugly movie: துணிவின் வெற்றிக்கு பின் அஜித் அவர்கள் மகிழ்ந்திருமேனியுடன் விடாமுயற்சி  படத்தில் இணைந்தார். பல்வேறு தடைகளை தாண்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது விடாமுயற்சி. விடாமுயற்சிக்குப் பின் ஏகே 63 காக ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கோர்க்கிறார் அஜித்.

திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் அறிமுகமான ஆதிக் தொடர் தோல்விகளுக்கு பின் கடந்த ஆண்டு மார்க் ஆண்டனி மூலம் தரமான வெற்றியை பதிவு செய்தார். 

விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பில் தெறிக்க விட்டது மார்க் ஆண்டனி. நடிப்பு அரக்கனான எஸ் ஜே சூர்யா தனி ஒருவனாக படத்தை தாங்கி பிடித்தார். இதன் வெற்றியை தொடர்ந்து பல வில்லன் கேரக்டர்களுக்கு நடிக்க எஸ் ஜே சூர்யாவிற்கு அழைப்பு வந்த வண்ணம் உள்ளது.

தமிழ், தெலுங்கு என பிசியாக இருக்கும் எஸ் ஜே சூர்யா தற்போது ஆதிக் ரவிச்சந்திரனின் அடுத்த படமான “குட் பேட் அக்லி” என்று பெயரிடப்பட்ட ஏகே 63 படத்தில் 24 ஆண்டுகளுக்குப் பின் அஜித்துடன் வில்லனாக இணைய உள்ளார்.  

எஸ் ஜே சூர்யாவின் முதல் படம் வாலி

எஸ் ஜே சூர்யா மற்றும் அஜித் காம்பினேஷன் வாலி திரைப்படத்தில் பிளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்தது. அஜித்திற்காக ஒவ்வொரு சீனையும் பார்த்து பார்த்து செதுக்கியிருந்தார் எஸ் ஜே சூர்யா. அஜித்தின் ஃபேவரைட் இயக்குனரான எஸ் ஜே சூர்யா வில்லனாக அவருடன் இணைய உள்ளது  ரசிகர்களிடையே வேற லெவல்ல ஹைப்பை எகிற வைத்து உள்ளது.

அஜித் விடாமுயற்சி சூட்டிங்கில் பிசியாக இருப்பதால்,அவர் இல்லாமலே படத்திற்கான பூஜை போடப்பட்டு ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கப்பட்டுள்ளது. 

ஃபான் இந்தியா மூவியாக ரெடியாகும் இதில் படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஜப்பானில் எடுக்கப்பட உள்ளதாம். சமீபத்தில் வெளியான போஸ்டரை பார்க்கும் பொழுது மார்க் ஆண்டனியை விட தரமான 100% ஆக்சன் மூவியாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 

ஒரு பக்கம் அஜித்தின் ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, வில்லனாக நடிப்பவரோ அஜித்தின் டார்லிங் எஸ் ஜே சூர்யா! ஒவ்வொரு பேட்டியின் போதும் அஜித்தை பற்றி பேசாமல் இருக்க மாட்டார் எஸ் ஜே சூர்யா. அந்த அளவுக்கு தீவிர ரசிகர்களான இருவருடன் இணையும் அஜித்தின் திரைப்படம் வேற லெவல் ஹிட் ஆகும் என்பது மறுக்க முடியாத உண்மை. 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு ஜுனில் தொடங்க உள்ளதாகவும் 2025 பொங்கலுக்கு அஜித்தின் ரசிகர்களுக்கு விருந்து ஆக அமையும் என்று படக் குழு தெரிவித்துள்ளது. 

Trending News