வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தனுசுக்கு ஜோடியாகும் அஜித்தின் மகள்.. 22 வயது வித்தியாசம், கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கும் பியூட்டி குயின்

Actor Dhanush: தனுஷ் இப்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ள நிலையில் அடுத்ததாக தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை தனுஷ் சொந்தமாக இயக்கி, நடிக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார்.

மேலும் நாளுக்கு நாள் தனுஷின் ஐம்பதாவது படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்த சூழலில் இப்படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது தனுசுக்கு ஜோடியாக இந்த படத்தில் அஜித்தின் மகள் நடிக்க இருக்கிறாராம்.

Also Read : சூர்யா, தனுஷ் மாதிரி கனவு கண்ட நடிகர்.. வயசு கோளாறில் நடிகையிடம் மயங்கி கிடக்கும் வாரிசு

இந்தச் செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. முதல்முறையாக கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கும் அவர் முதல் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். அதாவது அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்தவர் தான் அனிகா சுரேந்திரன்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் சில அடல்ட் மூவியிலும் நடித்திருக்கிறார். இந்த சூழலில் அனிகா மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து தனுசுக்கு ஜோடியாக நடிக்கிறார். அனிகாவுக்கு தற்போது 18 வயதாகும் நிலையில் தனுஷ் சமீபத்தில் நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார்.

Also Read : தவளை போல் தன் வாயால் கெட்ட தனுஷ் பட நடிகை.. பாலிவுட்டில் துரத்தப்பட்டதால் இங்கு தஞ்சமடைந்த ஹீரோயின்

இவர்கள் இருவருக்கும் கிட்டத்தட்ட 22 வயது வித்யாசம் உள்ளது. இதனால் தனுசுக்கு ஜோடியாக அனிகா செட்டாவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனாலும் பியூட்டி குயின் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த படத்தில் அனிகாவுக்கு முக்கியமான கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.

தனுஷின் காட்சிகள் இப்போது படமாக்க தொடங்கப்பட்டு விட்டது. மேலும் இப்படம் நார்த் மெட்ராஸ் சார்ந்த கேங்ஸ்டார் கதையாக எடுக்கப்படுகிறதாம். ஆகையால் வடசென்னை போன்று ஒரு வலுவான கதையாக இப்படம் இருக்கும் என்பதால் கண்டிப்பாக தனுஷுக்கு மிகப்பெரிய வெற்றி கொடுக்கும் என அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள்.

Also Read : அதிர்ஷ்டம் இல்லாத விஜய், தனுஷ்.. துணிந்து கையில் எடுக்கும் சூர்யா, ஒரேடியா காலவாரிடாம பாஸ்!

Trending News