வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நயன்-விக்கி திருமணத்திற்கு வந்த அஜித்தின் மச்சினிச்சி.. ஷாலினியுடன் இருக்கும் குட்டி ஏகே

கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ரஜினிகாந்த், இயக்குனர் அட்லி, சரத்குமார், சூர்யா, கார்த்தி என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் தல அஜித் மட்டும் நயன்-விக்கி திருமணத்திற்கு வருகை தரவில்லை. ஏனென்றால் ஹைதராபாத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் ஏகே 21 படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதால், அதில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதனால் தலஅஜித் படப்பிடிப்பில் மாட்டிக்கொண்டதால் திடீரென்று நயன்தாரா திருமணத்திற்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுடுள்ளது. ஏகே 21 படத்திற்காக 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்தது. இன்னும் 10 நாட்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே இருப்பதால் அதை முடித்துவிட்டு சென்னை திரும்பியதும் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியரை நேரில் சந்தித்து வாழ்த்துவார்.

இதனால் அஜீத் தன்னுடைய மனைவி ஷாலினி, மச்சினிச்சி, மகள், மகன் என மொத்த குடும்பத்தையும் நயன்தாரா திருமணத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார். ஷாலினி மணமக்களை வாழ்த்தி, பரிசுப் பொருட்கள் கொடுத்தது வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அதன்பிறகு அங்கு குடும்பமாக எடுத்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவை ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இதில் குட்டி ஏகே செம ஸ்மார்ட்டாக இருக்கிறார். நீங்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு குட்டி ஏகே-வை பார்த்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

அத்துடன் ஷாலினியின் மகளும் நெடுநெடுவென வளர்ந்திருக்கிறார் இந்த புகைப்படம் தற்போது தல ரசிகர்களால் சோசியல் மீடியாவில் வைரலாகிறது. இதேபோன்று நயன்தாராவின் நெருங்கிய தோழியான சமந்தாவும் குஷி படப்பிடிப்பில் மாட்டிக்கொண்டதால் அவரும் நயன்தாரா திருமணத்திற்கு வராத நிலை ஏற்பட்டுவிட்டது.

Trending News