திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வாடிவாசலுக்கு முன்னாடி ஒரு படம்.. அஜித்தின் ஃபேவரைட் இயக்குனரை அழைத்த சூர்யா

சூரரைப் போற்று படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யா தற்போது அடுத்தடுத்த படங்களின் இயக்குனர்கள் கவனமாக தேர்வு செய்து வருகிறார். மேலும் கமர்சியல் படங்கள் செய்வதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். பாண்டிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

அதனைத் தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வாடிவாசல் படம் மீண்டும் தள்ளி செல்ல அதிக வாய்ப்புள்ளதாம்.

அதற்கு காரணம் தன்னுடைய உறவினர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வாடிவாசல் படத்திற்கு முன் ஒரு படம் நடிக்க சூர்யா முடிவெடுத்துள்ளாராம் சூர்யா. மேலும் அந்த படத்தை அஜித்தின் ஃபேவரைட் இயக்குனரான சிறுத்தை சிவா இயக்கவுள்ளார்.

suriya-siruthaisiva-movie-update
suriya-siruthaisiva-movie-update

ஏற்கனவே சூர்யா மற்றும் சிறுத்தை சிவா படம் அறிவிக்கப்பட்டு பின்னர் சிறுத்தை சிவாவுக்கு ரஜினியின் அண்ணாத்த பட வாய்ப்பு வந்ததால் சூர்யா பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்ததாக தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில் அண்ணாத்த படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா வேறு எந்த படத்தையும் கமிட் செய்யாததால் சூர்யாவுடன் ஒரு படம் செய்வது உறுதி என்கிறார்கள்.

அதேபோல் சூர்யாவின் சூர்யா40 படமும் மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். அண்ணாத்த படப்பிடிப்பு ஏப்ரல் இறுதிக்குள் முடியும் என தெரிகிறது. இதனால் தற்போது சிறுத்தை சிவா மற்றும் சூர்யா கூட்டணி ஏறக்குறைய உறுதியாகி உள்ளது என்கிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள்.

Trending News