செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ரெட் ஜெயண்ட் உதயநிதியால் கிடைத்த அஜித் பட வாய்ப்பு.. தலைகால் புரியாமல் சந்தோஷத்தில் ஆடும் பிரபலம்

உதயநிதி நினைத்தால் மட்டுமே தற்போது தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளியாகும் என்று சில பிரபலங்கள் கூறி வருகிறார்கள். ஏனென்றால் தற்போது வெளியாகும் பெரும்பான்மையான படங்களை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வெளியிட்டு வருகிறது. இதனால் பல பிரபலங்கள் உதயநிதியை நாடி வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வெளியிட்டது. இதனால் அஜித் மற்றும் உதயநிதி இடையே ஒரு சமூக உறவு இருந்து வருகிறது. இப்போது உதயநிதியின் வலது கையால் இயக்குனருக்கு அஜித் படவாய்ப்பு கிடைத்துள்ளது.

Also Read : அஜித் வெறுத்து ஒதுக்கிய பின் கேரியரை இழந்த 5 இயக்குனர்கள்.. விக்னேஷ் சிவன் கதி அதோ கதி தான் போல

அதாவது சமீபத்தில் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால் தற்போது இயக்குனர்கள் விஷ்ணுவர்தன் மற்றும் மகிழ்திருமேனி ஆகியோரில் ஒருவர் ஏகே 62 படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இப்போது விஷ்ணுவர்தன் இயக்க வாய்ப்பு இல்லை என்றும் மகிழ்திருமேனிக்கு தான் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வந்துள்ளது. இதற்கு காரணம் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸின் முக்கிய பொறுப்பாளர் சண்முக மூர்த்தி தான் என கூறப்படுகிறது.

Also Read : நயன்தாராவால் விக்னேஷ் சிவனுக்கு கிடைத்த 4 படங்கள்.. எவ்வளவு தாஜா பண்ணியும் அஜித்திடம் பழிக்காத ஜம்பம்

சண்முக மூர்த்தியின் நெருங்கிய நண்பர் தான் மகிழ் திருமேனி. ஆகையால் லைக்காவிடம் மகிழ்திருமேனியை சண்முக மூர்த்தி அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும் இயக்குனர் சொன்ன கதை லைக்கா மற்றும் அஜித்துக்கு பிடித்துள்ளதால் உடனே படம் பண்ணலாம் என்று ஓகே சொல்லி விட்டார்களாம்.

கண்டிப்பாக மகிழ்திருமேனி நல்ல படம் கொடுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் 50 நாள் கால்ஷீட் என்றால் 100 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்துவார். ஏனென்றால் தனக்கு திருப்திப்படுத்தும் வரை எடுத்த காட்சியை திரும்பத் திரும்ப எடுத்து வருவார். ஆனால் அஜித் படத்தில் இப்படி செய்ய முடியாது. ஆகையால் அஜித்துக்காக தன்னை மாற்றிக் கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Also Read : விக்னேஷ் சிவனை கைவிடாத அஜித்.. ஏகே 62 குழப்பத்தை இன்னும் கிண்டி கிளறிய நெட்பிளிக்ஸ்

Trending News