வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியான அஜித் படம்.. இன்று வரை அடையாளமாய் மாறிப்போன கதை

எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவிற்குள் வந்து தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்துள்ள அஜித் இப்போது தவிர்க்க முடியாத ஒரு நடிகராக உருவெடுத்து இருக்கிறார். அந்த வகையில் இப்போது இவர் ஒரு படம் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்தாலே அதை வாங்குவதற்கு ஏகப்பட்ட போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இவருடைய ஆரம்ப காலத்தில் உருவான ஒரு படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு பலரையும் ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு அது மாபெரும் வெற்றியை பெற்றது. அது மட்டுமல்லாமல் அப்படம் இன்று வரை அஜித்திற்கு ஒரு அடையாளமாகவும் மாறி இருக்கிறது. இப்படிப்பட்ட பெருமை மிக்க படம்தான் காதல் மன்னன்.

Also read: வில்லனுக்கு உண்டான மரியாதையை கெடுத்துக் கொண்ட 5 படங்கள்.. அஜித்துடன் மோதி மொக்கை வாங்கிய விவேக் ஓபராய்

பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்த சரண் இயக்கிய முதல் படமும் இதுதான். இப்படம் உருவான சமயத்தில் பெரிய அளவில் யாரையும் கவரவில்லை. அதேபோன்று இதை விளம்பரப்படுத்தவும் யாரும் முயற்சி செய்யவில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில்தான் இப்படம் வெளியாகி இருக்கிறது. ஏனென்றால் இயக்குனரும் புதுமுகம், அஜித்தும் அப்போது வளர்ந்து வரும் ஒரு நடிகராக தான் இருந்தார்.

அப்படத்திற்கு முன்பே காதல் கோட்டை என்ற வெற்றி படத்தை அவர் கொடுத்திருந்தாலும் அதற்கு அடுத்தடுத்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனாலேயே இப்படம் எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இயக்குனர் மட்டும் இப்படம் ஓடுகிறதோ, இல்லையோ அஜித் மிகப் பெரிய நடிகராக உருவெடுப்பார் என்று ஆரூடம் கூறியிருக்கிறார்.

Also read: காசு பைத்தியம் பிடிச்சு அலையறாங்க.. நயன்தாரா லிஸ்டில் சேர்ந்த ரேசர் அஜித்

அது மட்டுமல்லாமல் அவருக்கு பெண் ரசிகைகள் கூட்டமும் அதிகரிக்கும் என்று தெரிவித்திருக்கிறார். அவர் கூறியது போலவே அஜித் இன்று புகழின் உச்சியில் இருக்கிறார். அதேபோன்று காதல் மன்னன் திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று சரணை ஒரு முன்னணி இயக்குனர் அந்தஸ்துக்கு கொண்டு சென்றது.

அதைத்தொடர்ந்து அஜித் மீண்டும் சரண் இயக்கத்தில் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட் ஆனது மட்டுமல்லாமல் அஜித்திற்கான வாழ்க்கைத் துணையையும் சேர்த்தே கொடுத்தது. இப்படி வெற்றி கூட்டணியாக மாறிய அஜித், சரண் இருவரும் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: அஜித்தின் ஆஸ்தான இயக்குனருடன் இணையும் தளபதி.. கனவு படத்திற்காக விஜய்க்கு போட்ட கொக்கி

Trending News