எல்லா மொழிகளியும் குறிவைக்கும் போனி கபூர்.. தீபாவளியை மறக்கடித்த அஜித்

தமிழ் சினிமாவில் வரும் பொங்கல் பழைய நிலைக்கு சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. காரணம் அஜித், விஜய் திரைப்படங்கள் நேருக்கு நேராக மோதுகின்றன. இந்த சம்பவங்கள் 8 வருடங்களுக்கு முன்பு நடந்தது. இப்பொழுது யாரும் எதிர்பார்க்காமல் இந்த படங்கள் மோதுகின்றன.

விஜய் நடித்த வாரிசு படப்பிடிப்பு ஆரம்பிக்கும் பொழுது வெளியிடும் தேதியை அறிவித்தனர். ஆனால் அஜித் நடித்த துணிவு திரைப்படம் தீபாவளிக்கு வரவேண்டியது காலதாமதத்தால் வெளியிடும் தேதி மாற்றப்பட்டது. படப்பிடிப்பு தற்போது முடிந்ததால் அதற்கான டப்பிங் மற்றும் அனைத்து வேலைகளும் நடைபெறுகிறது. இதனால் அஜித், விஜய் படத்துடன் மோதியே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு எடுத்து படத்தை பொங்கலுக்கு வெளியிட சொல்லிவிட்டார்.

Also Read : வேறு வழியில்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிபணிந்த அஜித்.. தொடர்ந்து இத்தனை படங்களா?

அதனால் வேலை பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது. 800 தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அதிகரிக்கக்கூடும் இல்ல குறையக்கூடும் காரணம் விஜய் படத்துக்கு சமமான திரையரங்குகளை ஒதுக்கவேண்டும் என்பதால். துணிவு படம் 5 மொழிகளில் வெளியிடப்படுகிறது.

இந்த செய்திகள் தீபாவளி வருவதை மறந்து பொங்கல் வருவதைப் மட்டும் இரு ரசிகர்களும் இப்பொழுது பேசத் தொடங்கிவிட்டனர். அதற்கான சண்டைகளும் வலைதளங்களில் ஆரம்பித்துவிட்டனர். இது தவிர வரும் தீபாவளிக்கு வாரிசு படம் மற்றும், விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பும் வெளிவருவதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வருகிறார்கள்.

Also Read : போனி கபூரை விட வெறியுடன் காத்திருக்கும் அஜித்.. 8 வருடங்களுக்குப் பின் நேருக்கு நேர் மோதும் சம்பவம்

இப்பொழுது இதற்கு பதிலடி தரும் விதத்தில் வரும் தீபாவளிக்கு அஜீத்தின் துணிவு படத்தின் போஸ்டர்கள் அல்லது டீசர் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை. இப்படங்கள் தீபாவளிக்கு வருவதைப்போல் இப்பொழுதே ஒவ்வொரு மாவட்டத்திலும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் ஒரு பக்கம் ஜாலியாக இருந்தாலும் விநியோகஸ்தர்கள் மட்டுமே கவலையில் இருக்கின்றனர் காரணம் வசூல் ரீதியாக எங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அதையெல்லாம் காதில் வாங்காமல் தயாரிப்பு நிறுவனங்கள் படத்தை வெளியிடப் போகிறார்கள் எப்படியோ இந்த பொங்கல் தாறுமாறான பொங்கலாக இருக்கப் போகிறது ரசிகர்களுக்கு.

Also Read : அஜித்தை கூப்பிட்டு ரஜினி சொன்ன அறிவுரை.. தப்பை சரிசெய்து இன்றுவரை அதே கோட்டில் நிற்கும் அஜித்