செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

ஒரே படத்தில் 43 விருதுகள் வென்ற வாரிசு! சாகச பயணத்தில் வாழ்க்கையை முடித்துக் கொண்ட அஜித்தின் உயிர் நண்பர்

Actor Ajith’s friend Vetri Duraisamy, who ended his life on an adventure trip: “எங்கே வாழ்க்கை தொடங்கும்! அது எங்கே எவ்விதம் முடியும்! இதுதான் பாதை இது தான் பயணம்!என்பது யாருக்கும் தெரியாது..!”  இப்படி ஒரு பயணத்தில் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்ட அஜித்தின் நண்பர் இயக்குனர் வெற்றி துரைசாமியை பற்றிய பதிவுதான் இது.

வெற்றி துரைசாமியின் தந்தை எம்ஜிஆரின் தீவிர பக்தர் மற்றும் விசுவாசியான சைதை துரைசாமி. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சென்னை மேயர் போன்ற பதவிகளை வகித்த சைதை துரைசாமி அவர்கள் தான் நடத்தும் மனித நேய அகாடமின் மூலம் பல இளம் தலைமுறைக்கு போட்டித் தேர்வுகளில் பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.

தன் அப்பா சைதை துரைசாமி மூலம் அடையாளப்படுத்தப்பட்ட வெற்றி துரைசாமி அவர்கள் அரசியலை வேண்டாம் என்று ஒதுங்கி இருந்து, பயிற்சி மையம், வர்த்தகம் மற்றும் பல துறைகளில் கவனம் செலுத்தி பல சமூக சேவைகளை செய்து வந்தார். தந்தையின் தலையீடு இன்றி தான் சினிமா துறையில் முன்னேற வேண்டும் என்ற  கொள்கையோடு இருந்தார் வெற்றி துரைசாமி.

Also read: காமெடி நடிகர்கள் அழ வைத்த 5 படங்கள்.. ரீஎன்ட்ரியில் பின்னி பெடல் எடுக்கும் சார்லி

வெற்றி துரைசாமி இயக்குனராக அறிமுகமான முதல் படம் “என்றாவது ஒரு நாள்”.  உலகமயமாக்கல், கால்நடை மீது மனிதர்களுக்கு இருக்கும் பாசம், தண்ணீர் பஞ்சம், குழந்தை தொழிலாளர்கள் என அனைத்து சமூக அநீதிகளையும் ஒருசேர கூறி சாமானியனை தட்டி எழுப்பிய திரைப்படம் “என்றாவது ஒரு நாள்”.  விதார்த் மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் 2021 வெளிவந்த இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் 43 விருதுகளை வென்றது.

அட்வென்சர்ஸ் பயணத்தின் மீது ஆர்வம் கொண்ட வெற்றி துரைசாமி, இதற்கு முன் நண்பர்களுடன் பல பயணங்களை மேற்கொண்டு இருந்தார் அது போலவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது நண்பர் ஒருவருடன் இமாச்சலபிரதேசத்திற்கு சூட்டிங் ஸ்பாட் தெரிவு செய்வதற்கு பயணம் மேற்கொண்டு இருந்தார் வெற்றி துரைசாமி.

காரில் சென்று கொண்டிருந்தபோது கார் விபத்துக்கு உள்ளாகி ,காரில் உள்ளே இருந்த வெற்றி துரைசாமி சட்லஜ் நதியில் தூக்கி எறியப்பட்டார். உள்ளூர் மக்கள் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் கடந்த 9 நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.  நதியின் பாறை இடுக்கில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார் வெற்றி துரைசாமி. இவரின்  இறப்பு சமூகத்திற்கும் திரைத்துறைக்கும் பேரிழப்பு என்பது மறுக்க முடியாத ஒன்று.

“வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களுக்காகவும் சாகசங்களுக்காகவும்” என்ற வரிகள் உடன் அஜித் தன் நண்பனுக்காக இரங்கல் செய்தி கூறி அவரது புகைப்படத்துடன் பதிவிட்டு உள்ளார் அஜித். மேலும் ஷாலினி அவர்கள் வெற்றி துரைசாமியின் கல்யாணத்தில் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இரங்கல் செய்தியை பகிர்ந்து உள்ளார்கள்.

Also read: திடீரென சூட்டிங்கை நிறுத்திய அஜீத்.. டங்குவாரை பிதுக்கி எடுத்தியா படக்குழு

Trending News