“குட் பேட் அக்லி” ஒன் லைன் ஸ்டோரி இதுதானாம்.. ஆதிக் மீது முழு நம்பிக்கையில் அஜித்

Ajith’s “Good Bad Ugly” movie one line story: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் ஒவ்வொரு நகர்வுகளும் அவரது ஆதரவாளர்களால் கவனிக்கப்படுகிறதோ! இல்லையோ! அவரை விமர்சிப்பதையே முழு நேர பணியாக மேற்கொள்ளும் நல விரும்பிகளால் உற்று நோக்கப்படுகிறது. 

இன்று பலராலும் தவறான முறையில் விமர்சிக்கப்படும் அஜித்தின் திரைவாழ்வை சற்று பின்னோக்கி சென்று கவனித்தால், ஒரே  இயக்குனருடன் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியிருப்பார். 

அதாவது ஒரு முறை அவருடன் இணைந்தவர்கள் மீண்டும் அவருடன் அடுத்த படத்தில் இணைவதையே விருப்பமாக கொண்டனர்.

இதை சற்று உடைத்து துணிவின் வெற்றிக்கு பின் தனித்துவமான படங்களை கையில் எடுக்கும் தடம் பதித்த இயக்குனர் மகிழ்திருமேனியின் இயக்கத்தில்  விடாமுயற்சி படத்தில் கூட்டணி சேர்ந்தார் அஜித்.

அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுவென நடந்து வரும் விடாமுயற்சி ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதனை அடுத்து ஏகே 63 படத்திற்காக  மார்க் ஆண்டனி புகழ் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்துள்ளார் அஜித். 

“திரிஷா இல்லனா நயன்தாரா” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன், தொடர் தோல்விகளுக்கு பின் கடந்த ஆண்டு விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யாவை வைத்து இயக்கிய மார்க் ஆண்டனியின் மூலம் கம்பேக் கொடுத்தார். 

அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக், நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த போது, அஜித்துடன் படம் பண்ண வேண்டும் என்ற தனது விருப்பத்தை கூறியுள்ளார்.

கதை கேட்ட அஜித், உடனே ஓகே சொல்ல படத்திற்கான பூஜை போடப்பட்டு ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் தயாராகியுள்ளது. மார்க் ஆண்டனியை போல் டைம் டிராவலிங்யை மையமாக வைத்து மூன்று காலகட்டங்களில் அஜித் வருவது போன்ற கதையாம்.

2025 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் அஜித்தின் குட் பேட் அக்லி

குட் பேட் அக்லி என பெயரிடப்பட்ட இந்த டைட்டிலை பார்க்கும் போது எஸ் ஜே சூர்யா வின் வாலியை போன்று தரமான நெகட்டிவ் ரோல் இருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி எஸ் ஜே சூர்யாவும் வில்லனாக இணைய உள்ளது படத்திற்கான கூடுதல் பிளஸ். 

மார்ச் இறுதியில் தொடங்க உள்ள இதன் படப்பிடிப்பு, முழுக்க முழுக்க ஜப்பானில் நடைபெற உள்ளதாம். அஜித்தின் குட் பேட் அக்லியை 2025  பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது என திட்டமிட்டு உள்ளனர் படக்குழுவினர்.