புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அஜித் செய்த உதவி.. நன்றி கடனாக பெண்ணின் கணவர் செய்த காரியம்

அஜித்தின் நல்ல குணத்திற்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பொதுவாக அஜித் மீது தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதாவது அஜித் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் என்றும், தனது சொந்த படத்திற்கு ப்ரமோஷன் செய்ய மாட்டார் என பலர் விமர்சனம் செய்வது உண்டு.

சில காரணங்களுக்காக தான் அஜித் இந்த விஷயங்களை தவிர்த்து வருகிறார். காரணம் நல்ல படமாக இருந்தால் அதற்கு ப்ரோமோஷன் தேவை இல்லை என்பது அஜித்தின் நிலைப்பாடு. அதேபோல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது தேவையில்லாமல் ரசிகர்களின் ஆர்ப்பாட்டத்தால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

Also Read: இந்த ஒரு விஷயத்தில் கமலுக்கு எதிர் துருவத்தில் இருக்கும் அஜித்.. முதலாளி ஆக ஆசைப்படாத மனுஷன்

அதை தவிர்க்க தான் அஜித் இவ்வாறு செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அஜித் செய்த விஷயம் அவரது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. அஜித் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தச் சமயத்தில் கிளாஸ்கோவிலிலிருந்து சென்னைக்கு ஒரு பெண் பயணம் செய்துள்ளார்.

அவர் 10 மாத கைக்குழந்தையுடன் தனியாக பயணம் செய்த நிலையில் அவருடைய பைகளை அஜித் எடுத்துச் சென்று உதவி செய்துள்ளார். அதுமட்டுமின்றி அங்கு உள்ள பலர் நாங்கள் எடுத்து வருகிறோம் என்று சொல்லியும் அஜித் பிடிவாதமாக அவரே இந்த உதவியை செய்துள்ளார்.

Also Read: டைட்டில் போஸ்டர் உடன் வெளியாக உள்ள ஏகே 62 அறிவிப்பு.. தரமான நாளை குறி வைத்த படக்குழு

மேலும் அந்த பெண் அஜித்துடன் புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டு உள்ளார். இதனை கைக்குழந்தையுடன் வந்த பெண்ணின் கணவர் சமூக வலைத்தளத்தில் அந்த புகைப்படத்தை வெளியிட்டு அஜித்துக்கு நன்றி தெரிவித்திருந்தார். இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள் தற்போது பெருமை கொண்டுள்ளனர்.

மேலும் இந்த செய்தியை அஜித் ரசிகர்கள் வைரலாக பரப்பி வருகிறார்கள். அஜித் இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் ஏகே62 படத்தில் இருக்கிறார். இதற்கான அறிவிப்பு எப்போது வரும் என ராசிகர்கள் காத்திருந்த நிலையில் மே ஒன்றாம் தேதி டைட்டில் போஸ்டருடன் அப்டேட் வர உள்ளது.

Also Read: அஜித்திடம் இப்ப வரை இருக்கும் ஒரே கெட்ட பழக்கம்.. எவ்வளவு முயற்சித்தும் ஷாலினியால் மாற்ற முடியல

Trending News