Actor Ajith : அஜித் இப்போது லைக்கா தயாரிப்பில் மகிழ்த்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பொதுவாக அஜித் எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத நிலையில் ரசிகர்கள் அவரை ஏர்போர்ட்டில் தான் அதிகம் பார்க்க முடியும். அப்போது எடுக்கப்படும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் கடந்த சில வருடங்களாகவே அஜித்தின் புகைப்படங்கள் அதிகம் இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று ஏர்போர்ட்டில் வீல்சேரில் இருக்கும் ஒரு பெண்மணி உடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
அஜித் பொது நிகழ்ச்சி மற்றும் மக்களிடையே விலகி இருப்பதால் அவர் மீது ஒரு தவறான பிம்பம் இருந்து வருகிறது. அதை உடைக்கும் வகையில் இந்த புகைப்படம் இருக்கிறது. அஜித் எப்போதுமே மனித நேயம் கொண்டவர் என்பதை உணர்த்தும் வகையில் நிறைய விஷயங்களை செய்து வருகிறார்.
Also Read : அஜித்துக்கு போன் போட சொன்ன விஜய்.. அரசியலை ஆட்டம் காண வைக்க போகும் சம்பவம்
மேலும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இப்போது படு பயங்கரமாக போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் திரிஷா மற்றும் பிரியா பவானி சங்கர் போன்ற கதாநாயகிகள் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் அஜித்தின் பிறந்தநாளில் விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதற்காக தான் இப்போது மும்மரமாக வேலைகள் நடந்து வருகிறது. மேலும் அஜித்தின் விடாமுயற்சி படம் தாமதமாக வந்தாலும் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அஜித்தின் தற்போதைய புகைப்படத்தை அவரது ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.
மனிதநேயம் கொண்ட அஜித்
![Ajith-recent-photo](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/11/Ajith-recent-photo.webp)
Also Read : அஜித், விக்ரம் தூக்கி எறிந்த 5 படங்கள்.. வம்படியாய் ஐந்தையும் வாங்கி ஜெயித்த ரோலக்ஸ்