Ajith- Rajini: கோலிவுட்டின் மாஸ் நடிகர்களான அஜித் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதனால் இவர்களது அடுத்தடுத்த பட அப்டேட்டை வெறித்தனமாக சோசியல் மீடியாவில் தெரிந்து கொள்கின்றனர்.
அஜித் தற்போது துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பும் இன்று துவங்க உள்ளது. இந்த நிலையில் இதுதான் விடாமுயற்சி படத்தில் அஜித்தின் புதிய கெட்டப் என இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவுகிறது.
Also Read: புலி வருது புலி வருதுன்னு பீலா விடும் விடாமுயற்சி.. கோட் சூட் போட்டு டிப் டாப்பா ஏமாற்றிய ஏகே
இதில் அஜித் ஒரு பாடி பில்டர் போல சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு கூலிங் கிளாஸ் அணிந்தபடி செம ஸ்டைல் ஆக போஸ் கொடுத்துள்ளார். இதுதான் அவருடைய அடுத்த படமான விடாமுயற்சி படத்தின் கெட்டப் என்றும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.
ஆனால் இது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஆர்ட் கிரியேட் புகைப்படம். இருப்பினும் இந்த லுக்கில் அஜித்தை பார்ப்பதற்கு தல ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அஜித் மட்டுமல்ல சூப்பர் ஸ்டாரும் செம ஸ்டைல் ஆக இருக்கக்கூடிய இன்னொரு புகைப்படத்தையும் உருவாக்கியுள்ளனர்.
அஜித்தின் புதிய கெட்டப்

Also Read: பேத்தி வயது நடிகை என்று பாராமல் ஜோடி போட்ட ரஜினி.. கூச்சமே இல்லாமல் டூயட் பாடிய 6 கதாநாயகிகள்
இந்த புகைப்படங்கள் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவுகிறது. ரஜினி தற்போது ஜெயிலர் படத்திற்கு பிறகு அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இதில் ஒரு திரை பட்டாளமே இணைந்து நடிக்கிறது.
தற்சமயம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தலைவர் 170 படத்தில் ரஜினியின் கெட்டப் இது தான் என்றும் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இந்த இரண்டு புகைப்படங்களும் ரசிகர்கள் விரும்பும் வகையில் இருப்பதால் அஜித், ரஜினி இருவரும் அடுத்தடுத்த படங்களில் இதுபோன்ற கெட்டப்பில் நடித்தால் கொல மாஸாக இருக்கும்.
கொல மாஸாக இருக்கும் ரஜினி
