தல அஜித்துக்கு அவருடைய கேரியரில் ஒரு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது உண்மைதான். அந்த கால கட்டங்களில் அவர் தொட்டதெல்லாம் தோல்வியை சந்தித்துக் கொண்டிருந்தன. இதனால் அவரது எதிர்கால சினிமா வாழ்க்கையும் கேள்விக்குறியானது.
தல அஜித் ஆரம்பத்தில் ஒரு சில நல்ல படங்களில் நடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் தொடர்ந்து பல தோல்வி படங்களை கொடுத்து சினிமாவை விட்டு ஓரங்கட்டப்படும் நிலைமைக்கு வந்தார். இருந்தாலும் அவருக்கு இருந்த ரசிகர் பட்டாளத்தை பார்த்துவிட்டுத்தான் பல தயாரிப்பாளர்கள் அஜீத்தை வைத்து படம் தயாரிக்க முன்வந்தனர்.
ஆனாலும் அந்த படங்கள் அனைத்துமே சொல்லிக்கொள்ளும்படி வெற்றியை பெறவில்லை. அந்த நேரத்தில் அஜித்துக்கு அமராவதி என்ற முதல் படத்தை கொடுத்த இயக்குனர் செல்வா பீக்கில் இருந்த நேரம்.
செல்வா தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தால் கண்டிப்பாக தனக்கும் ஒரு நல்ல கதையை எழுதிக் கொண்டு வருவார் என காத்துக் கொண்டிருந்தாராம் அஜித். அதுமட்டுமில்லாமல் மார்க்கெட் இல்லாத நேரத்தில் செல்வா தனக்கு உதவுவார் என மிகுந்த நம்பிக்கையில் இருந்துள்ளார் தல அஜித்.
ஆனால் செல்வா அப்படியொரு வாய்ப்பை அஜித்திற்கு தரவில்லை. இதுகுறித்து சமீபத்திய நாளிதழுக்கு பேட்டி அளிக்கையில், செல்வா ஏன்? அஜித்திற்கு தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருந்தபோது வாய்ப்பு கொடுக்க முடியவில்லை என்ற காரணத்தை கூறியுள்ளார்.
அஜித்துக்கு மார்க்கெட் இல்லாத அந்த நேரத்தில் அவரை வைத்து படம் தயாரிக்க பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ரெடியாக இல்லையாம். ஒருவேளை என்னுடைய வற்புறுத்தலுக்காக அஜித்துக்கு அட்வான்ஸ் கொடுத்தாலும் அடுத்த பத்து மாதத்திலேயே அவருக்கு மார்க்கெட்டில்லை என திரும்பி வாங்கி விடும் சூழ்நிலை கூட வந்தது. இதன் காரணமாகவே அஜீத் தன்னை தவறாக நினைத்தாலும் பரவாயில்லை என கூறி அஜித்துடன் படம் செய்வதை தவிர்த்து விட்டாராம் செல்வா.