வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இலவு காத்த கிளியாக மாறிய மகிழ்திருமேனி.. அஜித் கொடுத்துள்ள வாக்குறுதி என்ன தெரியுமா?

Vidaamuyarchi: இந்த அளவுக்கு அறிவிப்பு வெளியான பிறகும் அஜித்தின் படம் ஆரம்பிக்கப்படாமல் முந்தைய காலத்தில் இல்லை. ஆனால் விடாமுயற்சி படத்திற்கு மட்டும் என்ன தான் தெரியவில்லை அஜித்தை சுத்தலில் விட்டு வருகிறது. ஏதோ ஒரு காரணத்தினால் ஒவ்வொரு முறையும் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

கடைசியில் விடாமுயற்சி படம் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் தொடங்கும் என படக்குழு தரப்பில் இருந்து கூறப்பட்ட நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் திடீரென அஜித் மீண்டும் பைக் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன் என்று ஜூலை 27ஆம் தேதி கிளம்பிவிட்டார்.

Also Read : அஜித்துக்கு வில்லனாக நடித்தும் பெயர் கூட தெரியப்படாத நடிகர்.. பதுங்கி இருக்கும் அயலி பட பிரபலம்

இப்போது அவர் வெளிநாட்டில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் மற்றொருபுறம் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் இப்போதும் விடாமுயற்சி படம் தொடங்குமா என்ற சந்தேகம்தான்.

மேலும் அஜித்தால் இலவு காத்த கிளியாக மாறி இருக்கிறார் மகிழ் திருமேனி. வேறு படத்திற்கும் செல்ல முடியாமல், விடாமுயற்சி படத்தையும் எடுக்க முடியாமல் திணறி வருகிறார். இந்த முறையும் அஜித் தன்னை ஏமாற்றி விடுவாரா என்ற பயத்தில் இருந்த மகிழ்த்திருமேனிக்கு, அஜித் ஒரு வாக்குறுதி கொடுத்துவிட்டு தான் சென்றிருக்கிறாராம்.

Also Read : தனுசுக்கு ஜோடியாகும் அஜித்தின் மகள்.. 22 வயது வித்தியாசம், கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கும் பியூட்டி குயின்

அதாவது பத்து நாட்கள் மட்டுமே சுற்றுலா பயணத்திற்கு அஜித் கிளம்பி இருக்கிறாராம். ஆகையால் கூடிய விரைவில் திரும்பிடுவேன் அதன் பின்பு படப்பிடிப்பை கண்டிப்பாக தொடங்கலாம் என்று கூறி இருக்கிறாராம். எனவே இயக்குனர் அனைத்து வேலையையும் முடித்துவிட்டு தயார் நிலையில் இருக்கிறாராம்.

ஆகையால் சொன்னபடி ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மேலும் இப்போது இணையத்தில் பரவி வரும் பொய்யான விஷயங்களை யாரும் நம்ப வேண்டாம் என படக்குழு தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Also Read : அஜித் மச்சான் இல்லாமல் உருவாகும் மோகன் ஜி-யின் படம்.. அடுத்த ஏழரைக்கு தயாரான பெரிய ஹீரோ

Trending News