வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அஜித்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? அப்புறம் இருக்காதா பின்ன

சினிமாவில் நுழைவதற்கு முன் விளம்பரத்தில் நடித்த அஜித்குமர். அதன்பின் தெலுங்கில் பிரேம புஸ்தகம் மற்றும் தமிழில் அமராவதி படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின், வாலி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், முகவரி, சிட்டிசன், ரெட் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சில படங்கள் தோல்வி அடைந்தாலும், அடுத்து வெற்றிப் படம் கொடுத்து தன் ரசிகர்களை அவர் தேற்றிவிடுவார்.

தமிழ் சினிமாவைத் தாண்டி வேறு மொழிகளில் நடிக்க விருப்பம் காட்டாத அஜித்குமர் இந்தியில் ஷாருக்கான் நடித்த அசோகா படத்தில் அவர் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதற்காக அஜித்தை ஷாருக்கானே பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் முன்னனி நடிகராக வளர்ந்த பின் அவர் ஹீரோவாகவே நடித்து வந்த நிலையில், வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் தன் 50 வது படமான மங்காத்தாவில் வில்லனாக நடித்திருந்தார். வயதான நடிகர்களே தலைக்கு டை அடித்து வெள்ளை முடியை மறைக்கும் போது, அஜித் தன் இளம் வயதிலேயே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் எல்லோருக்கும் முன்மாதிரியாக அப்படத்தில் இயல்பான தோற்றத்தில் நடித்து அசத்தினார். படமும் சூப்பர் ஹிட். இதை தற்போது மற்ற நடிகர்களும் பின்பற்றி வருகின்றனர்.

இதுவரை 61 படங்களில் பல வித்தியாசமான கெட்டப்களில் நடித்து, ரசிகர்களை கவர்ந்த அஜித்குமார் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ளார். அவரது ஒவ்வொரு படத்தின் ஓபனிங்கும் பெரியளவில் இருப்பது எல்லோருக்கும் தெரியும். சினிமாவில் மட்டும் அல்ல ஃபார்முலா கார் ரேஸிங், பைக் ரேஸிங்கில் சர்வதேச அளவில் கவனம் செலுத்தி வருகிறார்.

அஜித்குமாரின் சொத்து மதிப்பு

அஜித்குமார் ஒரு படத்தில் நடிக்க ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. அவர் சென்னையிலும் துபாயிலும் பல கோடி மதிப்பில் சொகுசு வீடுகள் வைத்திருக்கிறார். அதேபோல், கார் பிரியரான அஜித்குமாரிடம் 1.5 கோடி மதிப்பிலான BMW 940 li car, 1.30 கோடி மதிப்பிலான சொகுசு கார்கள் இருந்தாலும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பயணிக்க சாதாரண வகை கார்களும் அவரிடம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

பைக் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டுள்ள அஜித் தன் வீட்டில் BMW R 1250 GS Adventure என்ற ரூ.22 லட்சம் மதிப்பிலான பைக்கும் வைத்திருக்கிறார். இதைத்தான் தன் உலகச் சுற்றுப் பயணம் இந்திய சுற்றுப்பயணத்தின் போது பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில், சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை இதுவரை தயாரிப்பிலோ, சினிமாவிலோ அவர் முதலீடு செய்யவில்லை என கூறப்படுகிறது.

அதன்படி, வீனஸ் என்ற பைக் சுற்றுப்பயண வழிகாட்டி நிறுவனத்தையும், அஜித்குமார் ரேஸிங் நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார். அதன்மூலம் வருமானம் வருகிறது. எனவே பல ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்திற்கு ரூ.600 கோடிக்கும் மேல் சொத்துகள் இருக்கலாம் என தகவல் வெளியாகிறது. அதன் தன் சொந்த உழைப்பில் இந்த உயரத்திற்கு வந்து இதனை சம்பாத்தித்துள்ளதற்கு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த இரண்டு படங்களும் அடுத்த ஆண்டு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News