வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஆடம்பர பங்களா, பிஎம்டபிள்யூ, லம்போர்கினி.. மிரள வைக்கும் அஜித்தின் சொத்து மதிப்பு

பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக இருக்கும் அஜித் இன்று தனது 52 வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடி வருகிறார். ஒவ்வொரு வருடமும் அவருடைய பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வரும் ரசிகர்கள் இன்று விடாமுயற்சியுடன் அதை அமர்க்களப்படுத்தி இருக்கின்றனர்.

ஏனென்றால் பிறந்தநாள் சர்ப்ரைஸாக இன்று ஏகே 62 திரைப்படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காகவே மாத கணக்கில் காத்திருந்த ரசிகர்கள் இப்போது இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். அந்த வகையில் இன்று சோசியல் மீடியாவே அஜித் ரசிகர்களால் அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Also read: விடாமுயற்சிக்கு சம்பளத்தை வாரி வழங்கிய லைக்கா.. 2வது இடத்திற்கு முன்னேறிய அஜித்

இப்படி அனைவராலும் கொண்டாடப்படும் அஜித் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் திரைத்துறைக்கு வந்தவர். அதனாலேயே இவர் ஆரம்ப காலத்தில் பல தோல்விகளையும், சறுக்கல்களையும் சந்தித்தார். அதன் பிறகு விஸ்வரூபம் எடுத்த இவர் இன்று ஒரு நடிகராக மட்டுமல்லாமல் கார், பைக் ரேஸர், புகைப்பட கலைஞர் போன்ற பல பரிமாணங்களை கொண்டு திகழ்கிறார்.

அந்த வகையில் இவருடைய மொத்த சொத்து மதிப்பு பலரையும் வாயடைக்க வைத்துள்ளது. அதிலும் இவருக்கு கார், பைக் வாங்குவதில் எப்போதுமே அலாதி பிரியம் உண்டு. அவ்வாறு பார்க்கையில் அஜித்திடம் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், லம்போர்கினி போன்ற சொகுசு கார்கள் இருக்கின்றன. அதே போன்று விலை உயர்ந்த ஏராளமான பைக்குகளையும் இவர் வைத்திருக்கிறார்.

Also read: ஏகே 62 டைட்டிலால் கிடைத்த ஏமாற்றம்.. ரவுண்டு கட்டி கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

அதைத்தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் இவருக்கு சொந்தமாக பிரம்மாண்ட வீடும் இருக்கிறது. அதில் சகல வசதிகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று திருவான்மியூரிலும் இவருக்கு சொந்தமாக பங்களா இருக்கிறது. இது தவிர இன்னும் பல சொத்துக்களும் இருக்கிறது. அந்த வகையில் இவற்றின் மொத்த மதிப்பே கிட்டத்தட்ட 400 கோடி வரை இருக்கும்.

மேலும் இதுவரை 85 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த அஜித் தற்போது 105 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். அதாவது தற்போது அவர் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்திற்காக லைக்கா நிறுவனம் இவ்வளவு தொகையை அவருக்கு கொட்டிக் கொடுத்திருக்கிறது. உண்மையிலேயே இது அவருடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான்.

Also read: AK 52,62 என ட்விட்டரை ஆக்கிரமித்த அஜித்.. இணையத்தையே அல்லோலப்படுத்தும் அஜித் ஃபேன்ஸ்

Trending News