Ajith : அஜித் பல வருடங்களாகவே சமூக ஊடகங்களில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பதையும் நிறுத்திக் கொண்டார். இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு பொது வழியில் அஜித் பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அஜித் இப்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சினிமாவை தவிர பல விஷயங்களில் அஜித்துக்கு ஆர்வம் உண்டு. அஜித்தின் பிரியாணிக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேபோல் துப்பாக்கி சுடுதலிலும் கைதேர்ந்தவர்.
மேலும் போட்டோகிராபி போன்ற பல விஷயங்களில் அஜித் ஈடுபாடாக இருப்பார். இவருக்கு மிகவும் பிடித்த விஷயம்தான் கார் மற்றும் பைக் ரேஸ். உலகம் முழுவதும் பைக் டூர் அஜித் செல்ல உள்ளார். இந்நிலையில் பயணம் பற்றி அஜித் பேசியது தான் இப்போது டிரெண்டாகி இருக்கிறது.
மதம் குறித்து அஜித்தின் பேச்சு
அதாவது தனது வீனஸ் டூல்ஸ் நிறுவனத்திற்காக ப்ரோமோ வீடியோவில் அஜித் பேசியிருக்கிறார். அதில் மதம் என்று நீங்கள் இதுவரை சந்திக்காத மக்கள் மீது உங்களுக்கு வெறுப்பை தூண்டும் என்ற ஒரு வாசகம் இருக்கிறது.
அது முழுக்க முழுக்க உண்மைதான். மதம் மற்றும் சாதி என்று எதுவாக இருந்தாலும் நாம் அவர்களை சந்திக்கும் முன்பு தவறான மதிப்பீடு செய்து விடுவோம். நீங்கள் பயணம் மேற்கொண்டு போது வெவ்வேறு தேசம், மதம், கலாச்சாரம் ஆகியவற்றைச் சேர்ந்த மக்களை பார்க்க முடியும்.
அப்போது அவர்களின் உணர்வை உங்களால் புரிந்து கொள்ள முடியும். பயணம் உங்களை நல்ல மனிதனாகும் என்று அஜித் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். பயணம் மற்றும் ஜாதி, மதம் குறித்து அஜித்தின் பேச்சு இப்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
உலகம் சுற்றும் அஜித்