செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வாரிசை பார்த்து பின்வாங்கும் நிலைமையில் அஜித்தின் துணிவு.. உருளும் வினோத்தின் தலை

நடிகர் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித்தின் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் துணிவு என மெகா ஸ்டார்கள் இருவரின் படங்களும் பல வருடங்களுக்கு பிறகு ஒன்றாக ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. ரசிகர்களும் இந்த இரண்டு படங்களும் பொங்கலன்று ரிலீஸ் ஆகும் என்ற அதீத எதிர்பார்ப்பில் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.

நடிகர் விஜயின் வாரிசு படத்தை இயக்குனர் வம்சி தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் இயக்குகிறார். இந்த படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார், குஷ்பூ, ஷாம், ஜெயசுதா மற்றும் யோகி பாபு நடிக்கின்றனர்.

Also Read: 3 இடங்களை குறி வைக்கும் லோகேஷ் கனகராஜ்.. தளபதி 67 க்கு இப்போவே போடும் ஸ்கெட்ச்

நடிகர் அஜித் தன்னுடைய முந்தைய பட இயக்குனர் ஹெச். வினோத்துடன் ‘துணிவு’ படத்தில் இணைந்து இருக்கிறார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்க மஞ்சு வாரியர், ஜான் கோக்கன், சமுத்திரக்கனி, அமீர், பாவ்னி, சிபி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் சூட்டிங் சென்னை மவுண்ட் ரோட்டில் நடைபெற்றது. இப்போது டப்பிங் வேலைகள் தொடங்கியிருக்கின்றன.

இந்த இரு படங்களும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில், அஜித் படத்தின் இயக்குனர் இந்த ரிலீஸ் தேதியிலிருந்து பின்வாங்குவது போல் தெரிகிறது. இந்த தேதி தள்ளி போனால் அது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமையும். துணிவு பட போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் மூன்று மாதத்திற்குள் முடிய வாய்ப்பில்லை என வினோத் கூறியிருக்கிறார்.

Also Read: விஜய்யுடன் கூட்டணி போடும் பாலிவுட் இயக்குனர்.. தளபதி 68-க்கு காசை வாரி இறைக்கும் தயாரிப்பாளர்

நடிகர் விஜய்க்கு சமீபத்திய ரெக்கார்டுகளில் பிளாப் படங்கள் எதுவுமில்லை. மேலும் இந்த படத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விஜய் ஒரு குடும்ப பின்னணி கதையில் நடிக்கிறார். ஆனால் அஜித்திற்கு முந்தைய படம் வலிமை அந்த அளவுக்கு கைகொடுக்கவில்லை. இதனால் தான் இப்போது விஜயுடன் போட்டியிட துணிவு படக்குழு பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

பட ரிலீஸை பற்றி பேசுகையில் வினோத், துணிவு படத்தில் அட்டகாசமான அதிரடி சண்டை காட்சிகள் இருப்பதாகவும், இதற்கான தொல்நூட்ப வேலைகள் எல்லாம் முடிக்க மூன்று மாதத்திற்குள் முடியாது என்றும் கூறியிருக்கிறார். துணிவு படம் ரிலீஸ் ஆகவில்லையென்றால் அது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும். இப்போது போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள், படப்பிடிப்பு, ரிலீஸ் என்று இவரின் தலை உருண்டுகொண்டிருக்கிறது.

Also Read: துணிவு படத்தில் இணைந்த பிக் பாஸ் ஜோடிகள்.. அசர வைக்கும் அப்டேட்

Trending News