செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பழக்கவழக்மெல்லாம் வீட்டு வாசப்படியோடு இருக்கணும்.. அஜித் அசிங்கப்படுத்தி விரட்டி அடித்த நட்பு

Ajith’s vidamuyarchi update and he say no for his friend new film: எந்த ஒரு தலைக்கணமும் இல்லாமல் பட்டத்திற்கு ஆசைப்பட்டு நிம்மதியை தொலைக்காமல் அளவோடு  படம் பண்ணி புகழ் சம்பாதிக்கும்  கலையை கற்று அறிந்தவர் அஜித். தொழிலில் நட்புடன் பழகும் அவர், நட்புக்குள் தொழிலை அனுமதித்ததில்லை. அஜித்துடன் படம் பண்ண வேண்டும் என்று நண்பர் ஒருவர் ஆசைப்பட்டு அசிங்கப்பட்ட கதையை பார்க்கலாம்,

கடந்த ஆண்டு துணிவு என்கிற ஒற்றைப் படத்தை ஹிட் ஆக கொடுத்து விட்டு ரிலாக்ஸ் ஆக மகிழ் திருமேனியின் விடாமுயற்சியில் ஒப்பந்தமானவர் இந்த ஜனவரி உடன் படத்தை முடிக்க போகிறார். மே மாதத்திற்குள் படத்தை ரிலீஸ் செய்ய அன்பு கட்டளை இட்டுள்ளார் அஜித்.

பின் தொடர்ச்சியாக ஆதிக் ரவிச்சந்திரன், வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ்  இயக்குனர்களின் கூட்டணியில் இவரின் படத்திற்கான வரிசை நீண்டு கொண்டே செல்கிறது. இந்நிலையில் அஜித்தின் ஆரம்ப கால நண்பர் ஒருவர் அஜித்துடன்  படம் பண்ண வேண்டி இவர்கள் மேனேஜர் சுரேஷ் சந்திராவை அணுகி உள்ளார்  யார் அந்த நண்பர்?

Also read: குடும்பத்திற்காக முரட்டுத்தனமாக நடந்து கொண்ட அஜித்.. துபாய்யில் ஆக்ரோஷமாக கொந்தளித்த சம்பவம்

அமராவதி படத்திற்கு பின் அஜித் ஆசை, மைனர் மாப்பிள்ளை, வான்மதி என ஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாகி கொண்டிருந்த சமயம். குகநாதன் இயக்கத்தில் வெளிவந்த மைனர் மாப்பிள்ளை படத்தில்  அஜித், ரஞ்சித், ஸ்ரீகாந்த், விவேக் வடிவேலு, ஸ்ரீவித்யா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர்.  படம் முழுக்க காமெடி டிராக்கை பின்பற்றி ரசிகர்களை வயிறு வலிக்க செய்து இருந்தனர்.

singapen srikanth

தற்போது சீரியலில்  வில்லனாக நடித்து வரும்  ஸ்ரீகாந்த், இப்படத்திலும்  வில்லனில் ஒருவராக இருந்தார். படப்பிடிப்பின் போது அஜித்துடன் ரொம்ப கிளோஸ் ஆக இருந்த ஸ்ரீகாந்த் அவர்கள் தற்போது டைரக்டராக முயன்று வருகிறார். ஒரு கதையை ரெடி பண்ணி அது அஜித் நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என்று அஜித்தை மீட் பண்ண அப்பாயின்மென்ட் கேட்டுள்ளார்.

அஜித்தின் மேனேஜரும் நீங்க ஒரு படம் பண்ணிட்டு வாங்க பேசிக்கலாம் என்று திருப்பி அனுப்பி உள்ளார் மேலும் மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கரின் மகனான அஜித்தின் குடும்ப டாக்டரை தொடர்பு கொண்டு அவர் மூலமாக அஜித்திற்கு தூதுவிட்டு உள்ளார் ஸ்ரீகாந்த்.

அஜித் அதற்கு பிரண்ட்லியா எது வேணாலும் பேசுங்க  சினிமாவை பத்தி மட்டும் பேச வராதீங்க என்று கண்டிப்புடன் கூறிவிட்டாராம்.  மனம் நொந்த நிலையில் கதை கூட கேட்காமல் ரிஜெக்ட் செய்தது வருத்தத்தை அளிக்கிறது. அஜித் வேண்டவே வேண்டாம் என்று தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணாவை வைத்து படம் இயக்க போவதாக சென்றுவிட்டாராம் நண்பர்.

Also read: அஜித்துடன் ஜோடி போட்டு காணாமல் போன 5 நடிகைகள்.. சின்னத்திரையில் கலக்கும் அந்த 6 அடி ஹீரோயின்

Trending News