வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரகசியமாக வைக்கப்பட்ட ஏகே 61 பட டைட்டில்.. இந்த ரெண்டில் ஒன்றை லாக் செய்யும் வினோத்

வலிமை திரைப்படத்திற்கு பிறகு வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் ஏகே 61 திரைப்படம் தயாராகி கொண்டிருக்கிறது. மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் இந்த கூட்டணி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இப்போது வரை இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் அந்த அப்டேட்டை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read : அஜித்துக்கு பயத்தை காட்டிய சினிஉலகம்.. ஈகோவை விட்டு இறங்கி வரும் ராஜதந்திரம்

இந்நிலையில் ஏகே 61 படத்தின் டைட்டில் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளிவந்துள்ளது. இப்போது பட குழு தலைப்பை அறிவிப்பதற்கு முன்பே சோஷியல் மீடியாக்களில் அது எப்படியோ கசிந்து விடுகிறது. அதனால் அஜித் பட டைட்டிலை மிகவும் ரகசியமாக வைக்க கூறியிருக்கிறாராம்.

அதன் காரணமாகவே இந்த படத்தின் டைட்டிலை சரியான நேரத்தில் ரிஜிஸ்டர் செய்து வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம். அந்த வகையில் படத்தின் டைட்டில் காலையில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டால் மாலையில் ரசிகர்களுக்கு அறிவிக்கப்பட்டு விடுமாம்.

Also read : ஒரு வாய் சோறு போட மாட்டாரா அஜித்.? எம்ஜிஆருடன் ஒப்பிட்டுப் பேசிய பிரபலம்

அதன் அடிப்படையில் படகுழு தற்போது வல்லமை, ராபரி போன்ற தலைப்புகளை முடிவு செய்து வைத்துள்ளது. இப்படம் வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவது பலருக்கும் தெரியும். அதனால்தான் ராபரி என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் அஜித்திற்கு வி என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் தலைப்பு மிகவும் ராசியாக இருப்பதால் வல்லமை என்ற தலைப்பு முடிவு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. எப்படி இருந்தாலும் இன்னும் சில நாட்களில் ஏகே 61 திரைப்படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக போஸ்டர் உடன் வெளியாகி விடும். அதற்காக அஜித் ரசிகர்கள் இப்போதிலிருந்தே ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read : பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொண்ட விக்னேஷ் சிவன்.. ஏகே 62-க்கு வந்த சோதனை

Trending News