இணையத்தை உலுக்கிய அஜீத்தின் AK-61 பட போஸ்டர்.. துப்பாக்கி, கடுக்கனுடன் மிரட்டும் மாஸ் லுக்

AK61
AK61

அஜித்தை பார்ப்பதற்கு எண்ணிக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக தற்போது வெளியாகியுள்ளது ஏகே 61 பஸ்ட் லூக் போஸ்டர். அஜித் என்றாலே ஸ்டைலிஷ் ஹீரோ தான். அந்த ஸ்டைலை பார்ப்பதற்குத்தான் இன்று வரை ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே இந்தப் படத்தை வருகிற பொங்கலுக்கு எப்படியாவது வெளியிட வேண்டுமென்று படக்குழு போர்க்கால அடிப்படையில் வேலை செய்து வருகிறது. அஜித்தை தவிர மொத்த படக்குழுவும் சூட்டிங்கில் மும்மரமாக வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறது. அஜித் அடுத்த வாரம் வெளிநாடு சென்று சூட்டிங்கில் பங்கேற்க இருக்கிறார்.

ரசிகர்கள் வேண்டியவாறு அஜித் ஸ்டைலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. துப்பாக்கியுடன் சோலோவாக அஜித் படுத்துக் கொண்டிருக்கும் இந்த மிரட்டல் லுக் வித்தியாசமாக உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் தெய்வத்தைப் பார்த்தது போல் கொண்டாடி வருகின்றனர். இணையதளத்தில் நம்பர் 1 டிரண்டிங்கில் இந்த போஸ்டர் கலக்குகிறது.

First-look
First-look
Advertisement Amazon Prime Banner