அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகைகள் நடிப்பது ஒன்றும் புதிதல்ல. தன் நடிப்பால் பாலிவுட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக உள்ளவர் வித்யா பாலன். இவர் முதல் முறையாக தமிழில் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்திருந்தார்.
இப்படத்தின் மூலம் வித்யா பாலனுக்கு தமிழ் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ரஜினியின் காலா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஹீமா குரேஷி அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
வலிமை படத்தில் அஜித்தின் காதலியாக ஷிமா குரோஷி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வெளியானால் தான் அஜித், ஹீமா குரேஷி இடையே உள்ள கெமிஸ்ட்ரி தெரியவரும். வலிமை படத்தில் தொடர்ந்து போனி கபூர், வினோத், அஜித் மூன்றாவது முறையாக கூட்டணி போடும் ஏகே 61 படத்திலும் பாலிவுட் நடிகையை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் 61வது படத்தில் 51 வயதான பாலிவுட் நடிகை தபுவை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தபு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். தபு தமிழில் காதல் தேசம் தொடங்கி பல படங்களில் நடித்துள்ளார்.
பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ள தபு தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது இரண்டாவது முறையாக அஜித்துடன் கூட்டணி போடுகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தொடர்ந்து மூன்று படங்களுக்கு அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகைகளை களம் இறங்கி வருகிறார் போனி கபூர். இது ரசிகர்கள் எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்வார்கள் என்பது தெரியவில்லை ஆனால் பத்து பொருத்தமும் பக்காவாக இருக்கிறது.