வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித்தின் அடுத்த பட டைட்டில் இதுதான்.. அதிரடியாக வெளிவர உள்ள ஏகே 61 மாஸ் அப்டேட்

வலிமை திரைப்படத்திற்கு பிறகு அஜித் மீண்டும் எச் வினோத் இயக்கத்தில் ஏ கே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தின் தலைப்பு இதுவரை அறிவிக்கப்படாமலே இருந்தது. அதனால் படத்தின் தலைப்பு என்ன என்ற ஒரு யூகம் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

இந்தப் படத்திற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட விஜய் படத்தின் தலைப்பு கூட அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தப் படத்தின் தலைப்பு மட்டும் சஸ்பென்ஸ் ஆகவே இருந்து வந்தது. இந்நிலையில் ஏகே 61 திரைப்படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also read : 20 வருடங்களாக முருகதாஸை ஒதுக்கி வைத்துள்ள அஜித்.. பின்னணியில் இருக்கும் சம்பவம்

அந்த வகையில் துணிவே துணை அல்லது துணிவு என்ற தலைப்பு தான் வைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் இரண்டு போஸ்டர்கள் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

அதில் ஒன்றில் அஜித் சேரில் அமர்ந்தபடி மிகவும் கெத்தாக இருப்பது போன்று வெளியாக இருக்கிறது. மற்றொன்று அஜித் கையில் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற மிரட்டல் போஸ்டரும் தயாராக இருக்கிறது. இது அஜித் ரசிகர்களை கட்டாயம் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read : கேட்டாலே மிரளுது, தரமான இரண்டு டைட்டிலை லாக் செய்த அஜித்.. அக்டோபர் 2-ஐ குறி வைக்கும் ஏகே 61

தற்போது வெளிவந்துள்ள இந்த தகவல் ரசிகர்கள் அனைவரையும் குஷிப்படுத்தியுள்ளது. மேலும் இன்று மாலை வெளியாக இருக்கும் இந்த அறிவிப்புக்காக அவர்கள் இப்போதிலிருந்தே ஆர்வத்துடன் காத்திருக்க ஆரம்பித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் இந்த விஷயம் தற்போது ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. பல ஹேஷ்டேக்குகளை உருவாக்கி அஜித் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.

Also read : வாரிசு ரிலீஸ் தேதியை லாக் செய்த தளபதி.. எந்த அலப்பறையும் இல்லாமல் விலகிய அஜித்தின் AK61

Trending News