திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பிள்ளையார் சுழி போடாத நிலையில் எண்ட் கார்டு போட்ட ஏகே 62.. அஜித்திற்கு கொடுத்த நெருக்கடி

அஜித்தின் துணிவு படத்திற்கு பிறகு அவருடைய அடுத்த படமான ஏகே 62 படத்தைப் பற்றி எந்தவித தகவல்களும் இப்பொழுது வரை வெளிவரவில்லை. முதலில் இப்படத்தை யார் இயக்குகிறார் என்பது பெரிய போராட்டங்களுக்குப் பிறகு மகிழ்திருமேனி இயக்குகிறார் என்று முடிவு எடுத்து அறிவிப்பை வெளியிட்டார்கள். ஒரு இயக்குனரை தேர்ந்தெடுப்பதற்கு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகி இருக்கிறது.

ஆனால் பொதுவாக உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவர்களுடைய அடுத்த படத்திற்கான சில முடிவுகளை எடுத்து விடுவார்கள். அப்படி இருக்கையில் அஜித் துணிவு படத்திற்கு பிறகு எந்தவித முடிவையும் எடுக்காமல் வெளியூர் பயணத்துக்கு போய் விட்டார். இதற்கிடையில் உறுதியானது தான் இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனம்.

Also read: விஜய்யை பின்னுக்கு தள்ளிய கடைசி 3 படங்கள்.. வினோத்தால் எகிறிய அஜித்தின் மார்க்கெட்

அடுத்ததாக படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்த்து நிலையில் மறுபடியும் வேர்ல்ட் டூர் கிளம்பிவிட்டார். ஆனால் போகும்போது படக்குழுவினரிடம் இந்த மாத இறுதியில் நான் வந்து விடுவேன் அதற்குள் நீங்கள் அனைத்தையும் தயார் பண்ணி வைத்திருங்கள் என்று கூறிவிட்டார். அதனால் ஏகே 62 படத்தில் அறிவிப்பு வருகிற மே 1 ஆம் தேதி வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ஆனாலும் அஜித்தின் ரசிகர்கள் எதற்காக இத்தனை நாள் தாமதமாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். அதற்கு பதில் அளிக்கும் விதமாக தான் இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் சேர்ந்து ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள். அதாவது மே மாதத்தில் ஏகே 62 படப்பிடிப்பை தொடங்கி தொடர்ந்து 40 நாட்களில் ஒரே கட்டமாக முடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

Also read: அழகுனா அப்படி ஒரு அழகு என்று ரசித்த அஜித்தின் 5 படங்கள்.. பெண்களின் மனதை கொள்ளை அடித்த காதல் மன்னன்

அதனால் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கூடிய சீக்கிரத்தில் தயார் செய்து வைத்துக் கொண்டால் தான் சாத்தியமாகும் என்பதால் அதற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் இப்படத்தை தொடர்ந்து 40 நாட்கள் எடுத்து முடித்துவிட்டு தீபாவளிக்கு படத்தை வெளியிடலாம் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் இதை பார்க்கும் பொழுது ஏகே 62 படத்திற்கு இன்னும் பிள்ளையார் சுழியே போடாத நிலையில் அதற்கான ரிலீஸ் தேதியை அறிவித்து எண்ட் கார்டு போட்டு விட்டார்கள்.

மேலும் படக் குழுவினர் சொன்னபடியே ஏகே 62 படத்தை 40 நாட்களுக்குள் எடுத்து முடித்தால் இதுவரை அஜித் படங்களிலேயே குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட படமாக இந்த படம் தான் அமையும். அத்துடன் அஜித்திற்கும் இந்த மாதிரியான ஒரு செக் வைத்து அவருக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக அமைகிறது. எது எப்படியோ அஜித் படத்திற்கான அப்டேட்டுகளும் மற்றும் கூடிய சீக்கிரத்தில் எடுத்து விட்டால் அதுவே மகிழ்ச்சி தான் என்று அவருடைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Also read: அஜித்துக்கு சிபாரிசு செய்த விவேக்.. லைஃப் டைம் படமாக ஏகே  கொடுத்த பிளாக்பஸ்டர் 

Trending News