வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

துணிவுடன் கனெக்ட்டாகும் ஏகே 62 டைட்டில்.. மீண்டும் சம்பவம் செய்ய போகும் அஜித்

அஜித், மகிழ்திருமேனி கூட்டணியில் ஏகே62 படம் உருவாக உள்ள நிலையில் இதற்கான அறிவிப்புக்காக ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது இந்த படம் குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கடைசியாக வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் துணிவு.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்திருந்தது. அதிலும் ஆக்ஷன், காமெடி என அனைத்திலும் அஜித் பட்டையை கிளப்பி இருந்தார். இப்போது துணிவு படத்துடன் ஏகே 62 படத்திற்கு கனெக்ட் உள்ளது. படத்தின் டைட்டில் மூலம் படக்குழுவினர் சஸ்பென்சை உடைக்க உள்ளனர்.

Also Read : அஜித்துடன் ஜோடி போட்டு சீரியல் நடிக்கும் 5 அம்மணிகள்.. எதிர்நீச்சல் ஈஸ்வரியாக மாஸ் காட்டும் வரலாறு கனிகா

அதாவது ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மார்ச் மாதம் லைக்கா நிறுவனம் வெளியிட இருக்கிறது. மேலும் அனிருத் ரவிச்சந்திரன் இசையில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாக இருக்கிறது. மேலும் அருண் விஜய் மற்றும் அருள்நிதி வில்லனாக நடிக்கிறார்கள்.

இந்நிலையில் ஏகே 62 படத்தின் டைட்டில் டெவில் அல்லது டார்க் டெவில் என்று வைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் துணிவு படத்தில் அஜித்தின் கதாபாத்திரமான டார்க் டெவில் என்பதை இப்படத்தின் டைட்டிலாக வைக்கிறார்கள். இதனால் துணிவு மற்றும் ஏகே 62 படத்திற்கு ஏதாவது கனெக்ட் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Also Read : 23 வயதில் அஜித்திற்கு அம்மாவாக நடித்த நடிகை.. டாப் சீரியலில் இப்போது இவங்கதான் ட்ரெண்டிங்

அதுமட்டுமின்றி இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் அல்லது திரிஷா நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இவர்கள் இருவரிடமுமே தற்போது படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும் அறிவிப்பு வெளியான உடனே படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

அஜித்தின் துணிவை விட இந்த படம் ரசிகர்களை ஒரு படி அதிகம் கவர வேண்டும் என்ற முனைப்பில் மகிழ்திருமேனி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாராம். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவோம் என அஜித்தின் ஏகே 62 தரமான அப்டேட் மிக விரைவில் ரசிகர்களை வந்தடைய காத்திருக்கிறது.

Also Read : ரிவெஞ் எடுத்தே ஆவேன்.. அஜித்தை தோற்கடிக்க விக்னேஷ் சிவன் போடும் கூட்டணி

Trending News