ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஆதிக் மடியில் விழுந்த ஏகே 63 பட வாய்ப்பு.. அஜித் நண்பர் கொடுத்த சர்டிபிகேட்

AK 63: துணிவு படத்திற்கு பிறகு அஜித் இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அஜித்தின் ஏகே 63 பட வாய்ப்பு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மடியில் விழுந்திருச்சு. இந்த வாய்ப்பு அவருக்கு ஒரு ஜாக்பாட் அடித்தது போல் தான்.

அஜித் எப்போதும் கொஞ்சம் ஏஜ்டு ஆன இயக்குனர்களுடன்தான் சேர்ந்து இதுவரை படம் பண்ணியிருக்கார். அவருடைய மேனேஜர்களான சுரேஷ் சந்திரா மற்றும் எல்ரெட் குமார் இருவரும் இப்போது அஜித்துக்கு பக்காவாக ஒரு ரூட் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

அதனால் தான் இப்போது முதல் முதலாக இளம் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி போட போகிறார். அஜித் தன்னுடைய 63வது பட வாய்ப்பை இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கொடுத்திருக்கிறார். இந்த படத்தை தயாரிப்பது எல்ரெட் குமார் தான்.

அஜித்துக்கு ரொம்ப நாளாகவே டைம் டிராவல் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்த விஷயத்தில் மிகவும் கைதேர்ந்தவர் ஆன ஆதிக் ரவிச்சந்திரன் ஏகே 63 படத்தில் அதை சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கையில் தான் இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்.

சமீபத்தில் விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை பார்த்ததும் அஜித் மெர்சல் ஆகிவிட்டாராம். இதுதான் இவர்களது கூட்டணிக்கு ஆரம்ப புள்ளியாக இருந்திருக்கிறது.

அதுமட்டுமல்ல மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த அஜித்தின் நண்பரான எஸ்ஜே சூர்யாவும் ஆதிக் திறமையை பற்றி அஜித்திடம் சொல்லி இருக்கிறாராம். ஆதிக் நிச்சயம் அஜித் நினைப்பது போல் நல்ல ஒரு டைம் ட்ராவல் ஸ்கிரிப்ட் உடன் ஏகே 63 படத்தில் தரமான சம்பவத்தை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News