சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ரிலீஸ் தேதியுடன் வெளியான ஏகே 63 டைட்டில் போஸ்டர்.. நீங்க கோட்னா நாங்க அதுக்கும் மேல

Actor Ajith : இன்று காலை முதலே எக்ஸ் தளத்தை மையம் கொண்டிருக்கிறார் அஜித். விடாமுயற்சி, ஏகே63, அஜித் ஆகிய ஹேஷ்டேக்குகள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. அதாவது அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் எதிர்பாராத விதமாக அஜித்துக்கு உடல்நிலை பிரச்சனை ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அஜித் இன்னும் ஒரு மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என கூறப்பட்டது.

ஏகே 63 டைட்டில் குட் பேட் அக்லி

ஆகையால் அடுத்த ஏப்ரல், மே மாதத்தில் தான் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மேலும் இன்று விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது ஏகே 63 டைட்டில் வெளியாகும் என ஒரு செய்தியை பரவி வந்தது. அதன்படி ஏகே 63 படத்திற்கு குட் பேட் அக்லி என்ற டைட்டில் வைக்கப்பட்டு போஸ்டர் வெளியாகி உள்ளது.

வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கப்பட்டது. நீங்க கோட்னா நாங்க அதுக்கும் மேல என அஜித்தின் ஏகே 63 படத்தின் டைட்டிலும் ஆங்கிலத்தில் இடம் பெற்று இருக்கிறது.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படம் உருவாக இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் கடைசியாக விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி படத்தை எடுத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

இதை அடுத்து குறுகிய காலத்திலேயே அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். மேலும் தேவி ஸ்ரீ பிரசாந்த் ஏகே 63 படத்திற்கு இசையமைக்க உள்ளார். விடாமுயற்சி படப்பிடிப்பு ஒருவேளை தாமதம் ஆனால் அதற்கு முன்னதாகவே இந்த படத்தை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

அதுவும் ஏகே 63 படத்தின் படப்பிடிப்பில் 80 சதவீதம் ஜப்பானில் நடக்க உள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குட் பேட் அக்லி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் இப்போது அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி உள்ளனர்.

ஏகே 63 டைட்டில் போஸ்டர்

good-bad-ugly
good-bad-ugly

Trending News