புதன்கிழமை, ஜனவரி 15, 2025

புலி வருது புலி வருதுன்னு பீலா விடும் விடாமுயற்சி.. கோட் சூட் போட்டு டிப் டாப்பா ஏமாற்றிய ஏகே

Ajith In Vidamuyarchi: பல மாதங்களாக அஜித்தின் விடாமுயற்சி படம் எப்பொழுது ஆரம்பிக்கப்படும் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது இன்ப அதிர்ச்சியாக நாளை படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது. அதுவும் படப்பிடிப்பு துபாயில் இருக்கும் அஜர் பைஜானில் நடக்க இருக்கிறது. இதற்காக ஒட்டுமொத்த பட குழுவினரும் அங்கே போயிருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து ஒரேடியாக 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி படத்தை ஒரு வழியாக முடித்து விட வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருக்கிறார்கள். அத்துடன் ஆரம்பத்திலேயே சண்டைக் காட்சிகளை எடுப்பதற்கு முடிவெடுத்து இருக்கிறார்கள். அதன் பின் த்ரிஷாவுடன் இருக்கும் காட்சிகளை எடுக்கப் போகிறார்.

Also read: பூகம்பமாக வெடிக்கும் பிரச்சனையில் அடிபடாத அஜித்தின் பெயர்.. மற்ற நடிகர்கள் சிக்குவதற்கு இதான் காரணம்

ஆனால் அஜித் ஏர்போர்ட் போகும்போது வெளியான புகைப்படம் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியையும், பல கேள்விகளையும் எழுப்பி வருகிறது. அதாவது அஜித்தை பார்க்கும் பொழுது படத்திற்கு தேவையான எந்தவித கெட்டப்பும் இல்லாமல் சாதாரணமாக கோட் சூட் போட்டுக்கொண்டு போயிருக்கிறார்.

அவர் விடாமுயற்சி படத்திற்காக எந்தவித மாற்றமும் செய்யாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் எட்டு மாதத்திற்கு முன்பு எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார். என்ன, கொஞ்சம் ஹேர் கட் பண்ணி சேவ் பண்ணி இருக்கிறார் அவ்வளவுதான். மத்தபடி படத்திற்கு தேவையான கெட்டப் எதுவுமே இல்லை. எது எப்படியோ நாளை படப்பிடிப்பு ஆரம்பம் ஆகிறது என்பது ஊர்ஜிதம் ஆகிவிட்டது.

Also read: கடவுள் மாதிரி நடிக்கிறேன்னு சந்தி சிரித்த 5 ஹீரோக்கள்.. கேளிக்கும் கிண்டலுக்கும் ஆளான அஜித் படம்

இதனால் இந்த கெட்டப்பை பார்த்து மறுபடியும் ஏமாற்றத்துடன் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏற்கனவே எட்டு மாதம் வரை விடாமுயற்சி படம் இப்ப ஆரம்பித்து விடும் நாளைக்கு ஆரம்பிச்சிடும் என்று புலி வருது புலி வருதுன்னு பீலா விட்டுக்கிட்டு வந்தாங்க. இப்ப மறுபடியும் இவரை இந்த மாதிரி பார்த்ததும் ரொம்பவே ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறார்கள்.

மேலும் அஜித் ஏன் இப்படி நடந்து கொள்கிறார். ரசிகர்களுக்காக எந்த ஒரு விஷயத்தையும் பண்ண மாட்டாரா என்று இவர் மீது தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் படத்தை இயக்கும் மகிழ் திருமேனி கூட இதைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டாரா? இல்லையென்றால் படத்திற்கு இதுதான் கெட்டப்பாக இருக்குமா என்று ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

Also read: அஜித்தே ஏன் இந்த படத்தில் நடித்தோம்னு வெறுத்து போன 5 படங்கள்.. ஹைப் ஏத்தி பிளாப் ஆன ஜனா

Trending News