திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லோகேஷ் LCUவில் AK?. ஒரே படத்தில் மோத போகும் அஜித், விஜய்

லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 67 படத்தை எடுத்து வருகிறார். மாஸ்டர் படத்திற்குப் பிறகு லோகேஷ், விஜய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் தினமும் தளபதி 67 என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மேலும் இந்த படத்தில் பல பிரபலங்களின் பெயர் அடிபட்டு வருகிறது. இயக்குனர் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான் போன்றோர் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வந்தது. சமீபத்தில் சீயான் விக்ரம் இந்த படத்தில் இணையுள்ள செய்தியும் வெளியானது.

Also Read : ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த லோகேஷ்.. வாயை பிளக்க வைத்த தளபதி 67 ப்ரீ சேல் விவரம்

இந்த சூழலில் தற்போது தளபதி 67 படத்தின் அஜித் நடிப்பதாக ஒரு செய்தி இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் ஏற்கனவே விக்ரம் படத்தில் கைதி படத்தில் உள்ள சில கதாபாத்திரங்கள் இடம்பெற்றது. அதிலும் விக்ரம் படத்தில் கடைசி ஐந்து நிமிடங்களில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்களைப் பெரும் அளவு கவர்ந்து இழுத்தது.

அதேபோல் தளபதி 67 படத்தின் விஜய்க்கு வில்லனாக அஜித் வருவார் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் ஒரே நாளில் மோதிக்கொண்ட நிலையில் தளபதி 67 படத்தின் இவர்கள் இருவரும் ஒன்றாக மோத உள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது.

Also Read : புரியாத புதிராக லோகேஷ் அளித்த ஷாக்கிங் பதில்..தளபதி 67 இல் விக்ரம் இருக்காரா?

மேலும் விக்ரம் படத்தில் சூர்யாவுக்கு கொடுக்கப்பட்ட வெயிட்டான கதாபாத்திரம் போல இந்த படத்தில் அஜித்துக்கு இருக்கும் என்று செய்தி வெளிவந்த நிலையில் பலரும் இது முற்றிலும் வதந்தியே என்று கூறி வருகிறார்கள். மேலும் தளபதி 67 படத்தில் அஜித் நடிக்க வாய்ப்பே இல்லை என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஆனால் தளபதி 67 படத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை மீறி லோகேஷ் கண்டிப்பாக ஏதாவது செய்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் அவரது ஒவ்வொரு படத்தை எடுத்துப் பார்க்கும் போதும் முதல் படத்தை காட்டிலும் அடுத்த படத்தில் பல மடங்கு உழைப்பை போட்டிருப்பார். ஆகையால் தளபதி 67 படத்தின் மாஸ் சம்பவம் செய்ய இருக்கிறார்.

Also Read : தளபதி 67-ல் விஜய்க்கு முக்கியத்துவம் இல்லையாம்.. லோகேஷ் போட்டிருக்கும் ஸ்கெட்ச்

Trending News