வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மட்டமான வேலை பார்த்த AK Mafia ரசிகர்.. தமிழை போல் தெலுங்கிலும் வாரிசுக்கு எதிராக நடக்கும் சதி

கடந்த சில வருடங்களாகவே விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையே பெரும் போட்டியும், சண்டையும் நடைபெற்று வருகிறது. அதிலும் சோசியல் மீடியாவில் இவர்கள் தினமும் ஏதாவது ஒரு ஏழரையை கூட்டி பிரச்சனை செய்து வருவது வழக்கம். மேலும் வாரிசு, துணிவு படங்கள் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே இந்த அட்டகாசம் இன்னும் அதிகரிக்க ஆரம்பித்தது.

அந்த வகையில் பொங்கலை முன்னிட்டு ஒரே நாளில் வெளியான இந்த இரண்டு படங்களும் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் துணிவு திரைப்படத்திற்கு சப்போர்ட் செய்து சில ரசிகர்கள் வாரிசை மட்டம் தட்டி வருகின்றனர். அதிலும் சோசியல் மீடியாவில் வாரிசு படம் படு கேவலமாக இருக்கிறது என்ற விமர்சனங்களையும் பரப்பி வருகின்றனர்.

Also read: நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கிய வாரிசு.. 3 நாள் பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய வசூல்

பொதுவாகவே இரு தரப்பு ரசிகர்களும் விஜய், அஜித் படங்கள் வெளி வரும்போது இது போன்ற நெகடிவ் விமர்சனங்களை பரப்பி வருவார்கள். ஆனால் இந்த முறை வாரிசு திரைப்படம் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அது இப்போது தெலுங்கு வரை சென்றிருக்கிறது. அதாவது வாரிசு திரைப்படம் இன்று தெலுங்கில் வெளியாகி உள்ளது.

ajith-fan-tweet
ajith-fan-tweet

முதல் காட்சியிலேயே படம் நன்றாக இருப்பதாக பல ரசிகர்களும் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் வாரிசு படம் பற்றிய நெகடிவ் கருத்துகளை பரப்பி வருகிறார். அந்த வகையில் தன்னை ஏகே மாபியா என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் அந்த நபர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டு இருக்கிறார்.

Also read: 100 கோடி வசூலில் டாப் 7 ஹீரோக்களுக்கு தண்ணி காட்டிய ஒரே ஹீரோ.. பாக்ஸ் ஆபீஸ் கிங் என மீண்டும் நிரூபித்த வாரிசு

அதாவது வாரிசு திரைப்படம் தமிழ்நாட்டைப் போலவே தெலுங்கிலும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவை பார்த்த விஜய் ரசிகர்கள் அவருக்கு சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். ஏனென்றால் தற்போது தெலுங்கு ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டர்களில் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வயிற்றெரிச்சல் காரணமாகவே இவர் இது போன்று கூறி வருவதாகவும், காசு வாங்கிக்கொண்டு சில ரசிகர்கள் இப்படி விமர்சனம் செய்து வருவதாகவும் கூறி வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் வாரிசு வசூலில் சாதனை படைத்து வருகிறது என்பது மட்டுமே உண்மை. அந்த வகையில் உலகம் முழுவதிலும் வாரிசு திரைப்படம் மூன்று நாட்களிலேயே 100 கோடி வரை வசூலித்து இருக்கிறது. இது தெலுங்கிலும் தொடரும் என சினிமா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Also read: கொழுந்துவிட்டு எரியும் வாரிசு, துணிவு விவகாரம்.. பகிரங்க மிரட்டல் விடுத்த ரெட் ஜெயிண்ட்

Trending News