செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

துணிவு படத்திற்கு கிடைத்த ரெஸ்பான்ஸ்.. ஏகே 62 மூலம் லியோவுக்கு வரும் அடுத்த சிக்கல்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியது. இதுவரை அஜித் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் இந்த படம் தான் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. தியேட்டரில் மட்டுமல்லாமல் இப்படம் ஓடிடி தளத்தில் கூட பல சாதனைகள் படைத்தது. இதுவே அஜித்தின் அடுத்த பாய்ச்சலுக்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

அதனாலேயே அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் தற்போது ஏகே 62 திரைப்படம் எப்பொழுது ஆரம்பிக்கும், என்னதான் அதில் பிரச்சனை என்ற குழப்பம் ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே ஒரு இயக்குனரை முடிவு செய்து அவரை நிராகரித்த நிலையில் தற்போது மகிழ்திருமேனி இப்படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.

Also read: 5 வருடங்களில் விஜய்க்கு இத்தனை தோல்வி படங்களா.? ரீஎன்ட்ரி கொடுத்து 100 கோடி கிளப்பில் இணைத்த படம்

இது கிட்டத்தட்ட உறுதியான விஷயம் என்றாலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வரவில்லை. அது மட்டுமல்லாமல் இப்படத்தின் சூட்டிங், பூஜை, ரிலீஸ் என்ற எந்த ஒரு தகவல்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதனாலேயே இப்போது ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்திலும், கோபத்திலும் இருக்கின்றார்கள். தற்போது அவர்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் ஒரு விஷயம் கசிந்துள்ளது.

அதாவது ஏகே 62 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு இடைவேளை இன்றி தொடர்ச்சியாக நடைபெற இருக்கிறதாம். ஏனென்றால் இப்படத்தை வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியிட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தயாரிப்பு நிர்வாகம் இருக்கிறது.

Also read: ஸ்பைடர் மேனாக மாறிய ஹிப் ஹாப் ஆதி.. ட்ரெண்டாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இப்படி ஒரு கண்டிஷனை தான் அஜித் போட்டு இருக்கிறார். அதனால் தான் இத்தனை நாட்கள் இந்த படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அஜித்தின் கண்டிஷனுக்கு இயக்குனர் ஓகே சொல்லி விட்டதால் அடுத்த கட்ட வேலைகள் ஆரம்பமாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த வருடத்தில் இரண்டாம் முறையாக விஜய், அஜித் இருவரும் நேரடியாக மோதிக்கொள்ள இருக்கின்றார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ வரும் அக்டோபர் மாதம் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளிவர இருக்கிறது. அதனாலேயே அஜித் தீபாவளிக்கு படத்தை வெளியிட பிடிவாதம் பிடித்திருக்கிறார். ஏனென்றால் துணிவு திரைப்படத்திற்கு அந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. அப்படி ஒரு வெற்றியை ருசித்த அஜித் மீண்டும் விஜய்யுடன் மோதி தன் பவரை காட்ட வேண்டும் என்று நினைக்கிறார். இப்படி ஒரு மறைமுகப் போட்டி நடந்து கொண்டிருக்கும் நிலையில் எப்படியாவது ஏகே 62 ஆரம்பித்தால் சரிதான் என்ற பேச்சும் கிளம்பியுள்ளது.

Also read: எப்போது தொடங்கும் ஏகே 62 படப்பிடிப்பு.. அதிரடியாக வரப்போகும் அப்டேட்

Trending News