இனியா செய்த காரியத்தால் லட்சியத்தில் தோற்றுப் போய் நிற்கும் ஆகாஷ்.. மகளை நினைத்து ஆனந்தகண்ணீர் வடிக்கும் பாக்யா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், எல்லா விஷயத்திலும் பொண்ணுங்க உஷாரு தான் என்பதற்கு ஏற்ப சும்மா இருந்த ஆகாசை சுரண்டி விட்டு காதல் என்று இனியா அட்டகாசம் பண்ணினார். இந்த காதல் விஷயம் வீட்டுக்கு தெரிந்த பிறகு செழியன், ஆகாஷை அடித்து துன்புறுத்தி விட்டார். இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் வேதனையை அனுபவித்த ஆகாஷ் எக்ஸாமில் தோற்றுப் போய்விட்டார்.

அதே காதலில் இருந்து இனியா, படித்து பாஸ் ஆகி பத்திரிக்கை ஆபீஸில் ரிப்போர்டராக சேர்ந்து விட்டார். அந்த வேலையில் சேரும்பொழுது பாக்யா, இனியாவுக்கு கிப்ட் கொடுத்து மொத்த குடும்பமும் வழி அனுப்பி வைத்து சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள். ஆனால் ஆகாஷ் எக்ஸாமில் பெயில் ஆயிட்டான் என்ற நினைப்பில் ஆகாஷ் மற்றும் செல்வி குடும்பம் அவஸ்தப்பட்டு வருகிறது.

இதையெல்லாம் தாண்டி இனியா பண்ணுகிற முதல் வேலையை டிவியில் வருகிறது என்று குடும்பத்தில் இருப்பவருக்கு மெசேஜ் பண்ணி பார்க்க சொல்கிறார். உடனே ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து பார்க்கும் பொழுது இனிய பேசும் விதத்தை பார்த்து பாக்கிய ஆனந்தக் கண்ணீர் வடித்து பெருமிதம் படுகிறார். பாவம் சும்மா இருந்த பையனை காதல் என்று இழுத்து தேவையில்லாத பிரச்சினைகள் மாட்டிவிட்டு தற்போது ஆகாஷ் அவஸ்தை பட்டு கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக பாக்கியா, ஈஸ்வரியை சந்தித்து பேசி வீட்டிற்கு கூப்பிடுகிறார். ஆனால் ஈஸ்வரி என் பையனுக்காக நான் தான் இருக்கிறேன். அதனால் நான் எங்கேயும் வரவில்லை இங்கே இருந்து கொள்கிறேன் என்று சொல்கிறார். இருந்தாலும் என் காலத்துக்கு பிறகு என்னுடைய பையனை யார் பார்த்துக் கொள்வார் என்று நினைக்கும் போது தான் ரொம்பவே கஷ்டமாக இருக்கு என்று சொல்லும் பொழுது பாக்கிய அவங்க பசங்க அவங்கள பார்த்து இருப்பாங்க. நீங்க அதை நினைச்சு கவலைப்படாதீங்க என்று ஆறுதல் படுத்துகிறார்.

உடனே வீட்டிற்கு வந்த பாக்கியம் பசங்களை கூப்பிட்டு அடிக்கடி உங்க பாட்டியை பார்த்து பேசி அப்பாவிடமும் பேசுங்கள் என்று அட்வைஸ் பண்ணுகிறார். அடுத்ததாக பாக்யா ஹோட்டலுக்கு புதுசாக பிரச்சினை வந்திருக்கிறது. இந்த பிரச்சனையில் பாக்யாவுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக கோபி உதவப் போகிறார்.

Advertisement Amazon Prime Banner

Leave a Comment