தமிழ் சினிமாவில் பெரிய அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் மினிமம் கியாரண்டி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ எல் விஜய். கிரீடம், தலைவா போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.
தெய்வத்திருமகள் மற்றும் தலைவா படத்தின் போது எல் விஜய் மற்றும் அமலாபால் இடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அதன் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருமணமான அடுத்த ஒரு வருடத்திலேயே இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது இருவரும் அவர்களது வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர். இதற்கிடையில் ஒரு மருத்துவரை ஏ எல் விஜய் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த வருடம் தான் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. AL விஜய் மறுமணம் செய்து கொண்டபோதுகூட அமலாபால் தன்னுடைய முதல் காதலை பற்றி ஆங்காங்கே பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு பிறகு தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.